திமுகவுக்கு ஆதரவு..விஜய்க்கு எதிர்ப்பு.. விடுதலை-2 பேசும் அரசியல்

வெற்றிவெற்றிமாறன் இயக்கத்தில் 2023ம் ஆண்டில் வெளியானது விடுதலை 1 திரைப்படம். அதில், நிலம், மண், உரிமை, வன்முறையை போன்ற விஷயங்கள் காட்டி தமிழ் தேசிய அரசியலை வெற்றிமாறன் பேசியதாக விமர்சனங்கள் வெளியானது. படம் பெரும் ஹிட் ஆனதால் விடுதலை 2 படத்திற்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.

Nov 29, 2024 - 04:10
 0

சமீபத்தில் தவெக மாநாடு நடந்தது, இதில் கட்சியின் கொள்கைகளை பேசினார் அக்கட்சி தலைவர் விஜய். இதனால் லெஃப்டாகவும் இல்லாமல் ரைட்டாகவும் இல்லாமல் எதுவென்றே தெரியாத அளவுக்கு அரசியல் தெளிவு இல்லாமல் விஜய் பேசியதாக பல கருத்துகள் எழுந்தது. மேலும், ‘பாசிசம் பாயசம்’ போன்ற வசனங்களையெல்லாம் விஜய் பேசியது, சினிமா காட்சிகள் போல இருந்ததாக பலரும் இந்த மாநாட்டை விமர்சனம் செய்தனர்.

இதனால் அரசியல் அல்லது கொள்கை தெளிவு கொண்டிராதவராக கருதப்படும் விஜய்யை தான் விடுதலை 2 படத்தின் டிரெய்லரின் இயக்குநர் வெற்றிமாறன் தாக்கியுள்ளார் என்கின்றனர் சினிமா விமர்சகர்கள். மேலும், அதே டிரெய்லரில் திமுகவுக்கு ஆதரவான வசனம் இடம்பெற்றிருப்பதும் பேசுபொருளாகியுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow