இதுக்கு ஒரு எண்டே இல்லையா..? உதவித்தொகைக்கு ஆசைப்பட்டு நடந்த மோசடி

உத்திரப்பிரதேசத்தில் திருமண உதவித்தொகைக்கு ஆசைப்பட்டு சகோதரன் -சகோதரி, மாமனார்- மருமகள் திருமணம் செய்ய விண்ணபித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Dec 20, 2024 - 19:44
Dec 21, 2024 - 12:12
 0
இதுக்கு ஒரு எண்டே இல்லையா..? உதவித்தொகைக்கு ஆசைப்பட்டு நடந்த மோசடி
உத்திரப்பிரதேசத்தில் திருமண உதவித்தொகைக்கு ஆசைப்பட்டு போலியான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன

உத்தப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக  ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில  முதலமைச்சர் வெகுஜன திருமண திட்டத்தின் மூலம் ஏழை ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டு 35 ஆயிரம் ரொக்கம் மற்றும் சீர்வரிசை வழங்கப்பட்டு வருகிறது. விவாகரத்து பெற்ற பெண்கள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின மக்கள் ஆகியோருக்கு இந்த திட்டத்தின் மூலம் திருமணங்கள் நடத்தி வைக்கப்படுகிறது.

இந்நிலையில், வரும் ஜனவரி மாதம் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் வெகுஜன திருமண திட்டத்தின் மூலம் மூன்றாயிரத்து 451 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி  வைக்கப்படவுள்ளது. இதற்காக எட்டாயிரத்து 519 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதையடுத்து, விண்ணப்பங்கள் தொடர்பாக அரசு அதிகாரிகள் நடத்திய சோதனையில் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

அதாவது, உத்தரப்பிரதேசம் மொராதாபாத்தில் நிதி உதவிக்கும், பரிசுத் தொகைக்கும் ஆசைப்பட்டு சகோதரன் -சகோதரி, மாமனார்- மருமகள் ஆகியோர் திருமணம் செய்ய விண்ணப்பித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு விண்ணப்பங்கள் முழுமையான ஆய்விற்கு பின்னர் ரத்து செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து மாவட்ட சமூக நல அலுவலர் சைலேந்திர கெளதம் கூறியதாவது,  வெகுஜன திருமண நிகழ்விற்கான விண்ணப்பங்கள் கவனமாக மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. போலி விண்ணப்பத்தாரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.  இந்தத் திருமண திட்டத்தின் கீழ் திருமணம் செய்துகொள்ளும் ஜோடிக்கு 51 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். அதில், 35 ஆயிரம் ரூபாய் நேரடியாக  மணமகளின் வங்கிக் கணக்கிற்குச் சென்றுவிடும். திருமண ஜோடிக்கு பரிசுப்பொருட்களாக கொடுப்பதற்காக 10 ஆயிரமும், திருமண செலவிற்காக ஆறாயிரம் ரூபாயும் ஒதுக்கப்படும்.

கடந்த சில காலமாக உத்திரப்பிரதேசம் வெகுஜன திருமண திட்டத்தின் உதவித்தொகையை பெறுவதற்கு பல மோசடிகள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow