அஜித்துடன் இணைந்த நடிகை ரம்யா.. வைரலாகும் போஸ்டர்
அஜித் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடிகை ரம்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் 'துணிவு’ திரைப்படத்தைத் தொடர்ந்து ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன், ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள, என்.பி.ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.
‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்த நாள் முதல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. எப்போது ஃபர்ஸ் லுக் வரும்? எப்போது இரண்டாவது லுக் வரும் என சமூக வலைதளத்தில் கேள்விகளாக கேட்டு வந்தனர். பின்னர் ஒரு வழியாக படக்குழு ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கதாபாத்திரங்களின் போஸ்டர்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்சியில் ஆழ்த்தியது.
கடந்த மாதம் யாரும் எதிர்பாராத விதமாக ‘விடாமுயற்சி’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வரும் பொங்கல் பண்டிகை அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து சமீபத்தில் ’விடாமுயற்சி’ படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்த தயாரிப்பு நிறுவனம் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவித்தது.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, ’விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடிகை ரம்யா இணைந்துள்ளதாக படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர் .
‘கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான ரம்யா, ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’, ‘நம்ம வீட்டுக் கல்யாணம்’, உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் விஜேவாக பணியாற்றியுள்ளார். பின்னர், கடந்த 2007-ஆம் ஆண்டு பிரித்விராஜ்-ஜோதிகா நடிப்பில் வெளியான ‘மொழி’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் ‘மங்காத்தா’, ‘ஓகே கண்மனி’, ‘வனமகன்’, உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
What's Your Reaction?