மக்களை சந்திக்கவிடாமல் தடுப்பது தான் பெரியாருடைய பெண்ணிய லட்சனமா..? நாதக வேட்பாளர் ஆதங்கம்

ஒட்டுமொத்த திராவிடத்ததையும் எதிர்த்து போட்டியிடும் ஒரு பெண்மணியை, மக்களை சந்திக்கவிடாமல் தடுப்பது தான் பெரியாருடைய பெண்ணிய லட்சனமா என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி வேதனை தெரிவித்துள்ளார்.

Jan 19, 2025 - 12:24
Jan 19, 2025 - 13:30
 0
மக்களை சந்திக்கவிடாமல் தடுப்பது தான் பெரியாருடைய பெண்ணிய லட்சனமா..? நாதக வேட்பாளர் ஆதங்கம்
மக்களை சந்திக்கவிடாமல் தடுப்பது தான் பெரியாருடைய பெண்ணிய லட்சனமா..?

கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்டு திருமகன் ஈவெரா வெற்றிபெற்றார். அவர் 2023 ஆம் ஆண்டு திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.  அந்த இடைத்தேர்தலில்  திருமகன் ஈவெராவின் தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவன் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இவர் கடந்த ஆண்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்த நிலையில், மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்.5ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இடைதேர்தலை பிராதான எதிர்கட்சிகள் புறக்கணித்த நிலையில், காங்கிரஸ் இடைதேர்தலில் போட்டியிடாமல் திமுக போட்டியிடும் என அறிவித்தது. தொடர்ந்து, இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பாக வி.சி.சந்திரகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமியும் போட்டியிடுகின்றனர். 

இரண்டு கட்சியின் வேட்பாளர்களும், வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி இன்று மத்திய பேருந்து நிலையத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்காக தனது ஆதரவாளராகளுடன் வந்தார். அப்போது, தேர்தல் பரபரப்புரை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திடமிருந்து அனுமதி வரவில்லை என போலீசார் தெரிவித்து தடை விதித்தனர். 

இதனையடுத்து தடையை மீறி பேருந்து நிலையத்தில் இருந்த பொதுமக்கள் சந்தித்த வேட்பாளர் சீதாலட்சுமி, ஈரோடு கிழக்கு தொகுதியில் நிலவும் பிரச்சனைகளை சரி செய்ய நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டர். மேலும் ஒருசிலர் வயதானவர்களின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, நாம் தமிழர் கட்சியின் பிரச்சாரத்திற்காக தொடர்ந்து அனுமதி கடிதம் அனுப்பி வருவதாகவும், பல்வேறு காரணங்களை கூறி, மக்களை சந்திக்க விடாமல் தடை விதிப்பதாகவும் வேட்பாளர் சீதாலட்சுமி குற்றம்சாட்டினார். 

மேலும், பெரியார் மண், பெரியாரை எதிர்த்து பேசிவிட்டார்கள் எனக்கூறி வரும் திமுக அரசு, ஒட்டுமொத்த திடாவிடத்ததையும் எதிர்த்து தனி ஒருவராக போட்டியிடும் ஒரு பெண்மணியை, மக்கள் சந்திக்கவிடாமல் தடுப்பது தான் பெரியாருடைய பெண்ணிய லட்சனமா என்றும்,  அறம் வழியில் அரசியல் செய்ய வேண்டும் என்பதால் தான் நேற்று வரை பொறுமையாக இருந்ததாகவும், இனிமேல் இதுபோன்ற அராஜகத்திற்கு ஆளாகமாட்டேன் என வேட்பாளர் சீதாலட்சுமி தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow