மாநிலங்கள் அனைத்தும் இணைந்தது தான் இந்தியா- ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு
ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தாலும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி பழமை மாறாமல் நடைபெறும் எனவும் இந்தியா சனாதன தேசம் என்பதற்கு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி தலை சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி வருவதாகவும் தமிழ்நாடு ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.
தமிழர்களையும் காசியையும் இணைக்கும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி மாபெரும் தேசிய விழாவாக கொண்டாடப்படுவதாகவும், தமிழ்நாடும் காசியும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நெருக்கமாக இருந்ததை நினைவு கூறும் வகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுவதாகவும், எத்தனை ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தாலும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி பழமை மாறாமல் நடைபெறும் எனவும் இந்தியா சனாதன தேசம் என்பதற்கு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி தலை சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி வருவதாகவும் தமிழ்நாடு ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.
மூன்றாவது முறையாக காசி தமிழ் சங்கமம் இந்த ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதியிலிருந்து 24 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையடுத்து காசி தமிழ் சங்கமத்தின் மூன்றாம் ஆண்டு முன்னோட்ட நிகழ்ச்சி தரமணி ஐஐடி ஆராய்ச்சி மைய வளாகத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர்,
காசி தமிழ் சங்கமம் 3 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் உள்ளோம்.2022 இல் தொடங்கிய காசி தமிழ் சங்கமும் மூன்று ஆண்டுகளை எட்ட உள்ளது. காசி தமிழ் சங்கமம் மாபெரும் தேசிய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. மகா கும்பமேளாவிற்கு நேற்று ஒருநாள் மட்டும் 7 கோடி பேர் வந்துள்ளார்கள். காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிககு இதுவரை 21000 விண்ணப்பங்கள் வந்துள்ளது.இதில் 1200 பேரை தேர்வு செய்வது மிகவும் கடினமான விஷயம். தமிழகத்திலிருந்து செல்லும் தமிழர்களுக்கு காசியில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. காசி ,அயோத்தியா, பிராயாக்ராஜ் உள்ளிட்ட இடங்களை காசி தமிழ் சங்கமத்தில் காட்ட உள்ளார்கள், காசியும் தமிழ்நாடும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நெருக்கமாக இருந்ததை நினைவு கூறும் விதமாக காசி தமிழ் சங்கமம் நடந்து வருகிறது.
தமிழர்களையும், காசியையும் இணைக்கும் ஒரு மாபெரும் நிகழ்வாக காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. ஆங்கிலேயர்கள் இந்தியாவிலிருந்து வெளியேறிய பின் பல ஆண்டுகளுக்கு பிறகு காசியும் தமிழ்நாடும் சந்திக்கும் வகையிலான நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஒரே பாரதம் உன்னத பாரதம் என்பதை மையமாக வைத்து காசி தமிழ் சங்கமம் நடைபெற்று வருகிறது. காசி என்பது மினி இந்தியா. இந்தியா முழுவதும் இருந்து ஒரு நாளைக்கு 3 லட்சத்துக்கும் அதிகமான நபர்கள் காசிக்கு வருகிறார்கள். இதுதான் இந்தியா.மகாத்மா காந்தி ரகுபதி ராஜாராம் என மகாவிஷ்ணுவை மையப்படுத்தி தான் கூறினார் ஆனால் இப்போது இறைவன் பெயரை சொல்லி வழிபட வெட்கப்பபடுகிறார்கள். மகா கும்பமேளா உத்திர பிரதேச அரசால் நடைபெறவில்லை மத்திய அரசால் நடைபெறுகிறது அது சிறப்பாக நடைபெற உத்தர பிரதேச அரசு ஒருங்கிணைத்து வழிநடத்தி செல்கிறது.
கை, கால், கண் ,காது என உறுப்புகள் பிரிந்தால் உடல் முழுமை அடையாது அதுபோல மாநிலங்கள் பிரிந்தால் பாரதம் ஒன்றிணைய முடியாது மாநிலங்கள் அனைத்தும் இணைந்தது தான் இந்தியா அதுதான் பாரதம்.விரைவில் மூன்றாவது பொருளாதார நாடாக இந்தியா வளர்ச்சி அடைய உள்ளது.பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சி அமைந்த பிறகு பாரதம் சிறப்பான வழியில் வெற்றியை நோக்கி பயணித்து வருகிறது.
ராணுவம், அறிவியல், தொழில்நுட்பம் ,கல்வி என எல்லா துறைகளும் பல சுயசார்பு பெற்று வெற்றியை நோக்கி வளர்ச்சி அடைந்து வருகிறது. உலகில் எந்த துறையாக இருந்தாலும் அதில் பாரத நாடுதான் சிறப்பு மிக்க முன்னுதாரணமாக செயல்படும் துறையாக விளங்கி வருகிறது.பாரதத்தை இணைப்பதில் காசி தமிழ் சங்கமம் நிகழ்வு மிக முக்கிய பங்காற்றும்.பல ஆயிரம் ஆண்டுகளாக காசிக்கும் தமிழ் நாட்டிற்கும் இடையே தொடர்புகள் உள்ளது. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி பழமை மாறாமல் தொடர்ந்து நடைபெறும், இந்தியா சனாதன தேசம் என்பதற்கு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி சிறந்த எடுத்துக்காட்டு என தெரிவித்தார்.
What's Your Reaction?