தம்பி விஜய் உணர்ந்திருப்பார்னு நினைக்கிறேன்! தமிழசை செளந்தரராஜன் விமர்சனம்
2026 தேர்தலின்போது திமுக கூட்டனி ஆட்சியில் பங்கு கொடுக்கவில்லை என்றால் திமுக கூட்டணி வெளு வெளுத்து போகும் என முன்னாள் ஆளுநர் தமிழசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக முன்னாள் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் மதுரை வந்தடைந்தார். அப்போது மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மழையிலிருந்து மக்களை பாதுகாப்பது ஒரு புறம் என்றாலும் குளங்களை தூர்வாரி குடிநீரை சேமித்திருக்க வேண்டும். பெரியார் அணையில் குழாய்கள் உடைந்துள்ளதால் குடிநீர் வீணாகி விட்டது. குடிதண்ணீர் இல்லாமல் குடியிருப்புகளுக்குள் நீர் புகுந்து விட்டதால் பிரச்சனை அதிகமாகி விட்டது. திமுக அரசு சென்னை, மதுரை, திருச்சி என அனைத்து மாவட்டங்களையும் மழைக்கு தயார் செய்வதில் முற்றிலும் தோல்வி. உதயநிதி வார் ரூமில் அமர்ந்து விட்டதால் மழக்கான ஏற்பாடுகளை செய்து விட்டது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள். விடியா அரசு இன்று விளம்பர அரசாக மாறிவிட்டது. மிகப்பெரிய வானியல் சாகசத்தை கூட மக்கள் மகிழ்ச்சியுடன் பார்க்க கூடிய ஏற்பாடுகளை செய்ய முடியாத அரசுக்கு எதற்கெடுத்தாலும் விளம்பரம் தான். அன்னை மீனாட்சி நம்மை காப்பாற்றுவாள். ஆனால் இந்த திமுக ஆட்சி நம்மை காப்பாற்றுமா என்றுதான் கவலையாக உள்ளது. திமுக ஆட்சியில் பருப்பு கூட வேகாது போல உள்ளது. தீபாவளிக்கு ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு கிடைக்காது என்ற அச்சுறுத்தல் மக்களிடம் இருக்கிறது.
ராகுல் காந்தியை வன்மையாகக் கண்டிக்கிறேன். வான்சாகச நிகழ்ச்சியில் ஐந்து பேர் உயிரிழந்தபோது அவர் எங்கே சென்று இருந்தார். கள்ளக்குறிச்சியில் 65 பேர் உயிரிழந்த போது ராகுல் எங்கே சென்று இருந்தார். அதனால்தான் காஷ்மீரில் மக்கள் காங்கிரசுக்கு சரியான பதிலடி கொடுத்திருக்கிறார்கள். ரயில் விபத்துகளை வைத்து அரசியல் செய்ய வேண்டாம். ஆனால் வான் சாகசத்தில் உயிர் இழந்ததை அரசியலாக்க கூடாது என்று சொல்கிறார்கள். திமுக எதை எடுத்தாலும் அரசியலாக்கும். திமுகவின் கூட்டணி கட்சிகளே அதற்கு எதிராக திரும்பி இருக்கிறது. 2026 நிச்சயமாக இதே திமுக கூட்டணி நிலைக்காது. சாம்சங் விவகாரத்தை வைத்து கம்யூனிஸ்ட் வேறு எங்கோ செல்கிறார்கள், மதுவிலக்கு பிரச்சனையை வைத்து விசிக ஒரு புறம் செல்கிறார்கள், தங்களுக்கும் ஆட்சியில் பங்கு எடுக்க வேண்டும் என்று அப்போதுதான் கொஞ்சம் தைரியம் வந்து தம்பி கார்த்திக் சிதம்பரம் பேசி இருக்கிறார். 2026 தேர்தலுக்கு திராவிட கூட்டணிக்கு ஆட்சியில் பங்கு கொடுக்கவில்லை என்றால் திமுக கூட்டணி வெளு வெளுத்து போகும்.
தேர்தல் வரும்போது எது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும், எதைப்பற்றி வேண்டுமானாலும் நடக்கலாம். இப்போதைக்கு எங்கள் வேலை எங்கள் கட்சியை பலப்படுத்துவதற்கு உறுப்பினர்களை சேர்ப்பதுதான். கூட்டணி குறித்து எங்கள் அகில பாரத தலைவர்கள் முடிவு செய்வார்கள். ஒரு அரசியல் கட்சித் தலைவர் தவறை உணர்ந்து அதை திருத்திக் கொள்வது ஆரோக்கியமான சூழ்நிலைதான். ஆனால் தற்போது உள்ள சூழலில் இந்து மதம் சார்ந்த கருத்துக்களை யார் எதிர்த்தாலும் அவர்களை மக்கள் எதிர்பார்கள், இந்து மதம் சார்ந்த மக்களுக்கு ஆதரவு தரவில்லை என்றால் மக்கள் அவர்களுக்கு ஆதரவு தர மறுப்பார்கள் என்கிறதுதான் இன்றைய சூழ்நிலை. அதைத் தம்பி விஜய் உணர்ந்துவிட்டார் என்று நினைக்கிறேன். அவரிடம் இருந்து தீபாவளி வாழ்த்தையும் எதிர்பார்க்கிறோம். அவர் மட்டுமல்ல முதல்வரும் தீபாவளி வாழ்த்து கூறுவார் என எதிர்பார்க்கிறோம். திமுக தலைவராக இல்லை என்றாலும் தமிழக முதல்வராக தீபாவளி வாழ்த்து தெரிவிக்க வேண்டும். வாழ்த்து சொல்லவில்லை என்றால் தீபாவளி கொண்டாடுபவர்கள் அவரை எதிர்ப்பார்கள் என்பது எனது கருத்து” என்றார்.
What's Your Reaction?