NIA Raid: ஹிஸ்ப்-உத் தஹ்ரீர் அமைப்புக்கு ஆள் சேர்ப்பு.. என்ஐஏ ரெய்டில் சிக்கிய ஆவணங்கள்

உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட 'ஹிஸ்ப்-உத் தஹ்ரீர்'அமைப்பு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 11 இடங்களில் மேற்கொண்ட சோதனை நிறைவடைந்தது. பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Sep 24, 2024 - 09:55
Sep 24, 2024 - 17:45
 0
NIA Raid: ஹிஸ்ப்-உத் தஹ்ரீர் அமைப்புக்கு ஆள் சேர்ப்பு.. என்ஐஏ ரெய்டில் சிக்கிய ஆவணங்கள்
nia raid chennai

உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட  'ஹிஸ்ப்-உத் தஹ்ரிர்' என்ற அமைப்புக்கு நேரடியாகவும், யூடுயூப் பிரசங்கங்கள் மூலமாகவும் ஆட்கள் சேர்த்ததும், இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதும், சதிதிட்ட கொள்கைகளை தங்களுக்கும் பரப்பிக்கொண்டதும் NIA அதிகாரிகள் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
சென்னையில், சிட்டலபாக்கம், வண்டலூர், வெட்டுவாங்கேணி, திருவல்லிக்கேணி, ஏழு கிணறு, நன்மங்கலம், ராயப்பேட்டை வண்ணாரப்பேட்டை நீலாங்கரை உள்ளிட்ட இடங்களிலும், கன்னியாகுமரியில் ஒரு இடத்திலும் இன்று காலை முதல் நடைபெற்ற என்ஐஏ சோதனையானது தற்போது நிறைவடைந்துள்ளது.

உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட "ஹிஸ்ப்-உத் தஹ்ரிர்" அமைப்பு விவகாரம் தொடராக இரண்டு வழக்குகள் பதிவு செய்து இதுவரை 9 நபர்களை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

முதல் வழக்கு கடந்த ஜூன் மாதம் 30 ம் தேதி தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, கும்பகோணம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பத்து இடங்களில் சோதனை மேற்கொண்டு ஹிஸ்புத் தஹிரிர் அமைப்பு தொடர்பாக தஞ்சாவூரை சேர்ந்த அப்துல் ரகுமான், முஜிபுர் ரஹ்மான் (எ) முஜிபுர் ரஹ்மான் அல்தான் சாஹிப் ஆகிய இருவரை கைது செய்தனர். இதே வழக்கில் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து அஜீஸ் அகமது என்ற நபரை கைது செய்தனர்.

மேலும், சென்னை சைபர் கிரைம் போலீசார் பதிந்த வழக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு மாற்றப்பட்டு 'ஹிஸ்ப்-உத் தஹ்ரிர்' அமைப்பு தொடர்பாக UAPA சட்டத்தின் கீழ் இரண்டாவது வழக்கு பதிவு செய்து ராயப்பேட்டையைச் சேர்ந்த டாக்டர் ஹமீது உசேன், அவரது தந்தை மன்சூர், சகோதரர் அப்துல் ரகுமான் அவர்களது நண்பர்களான முகமது மாரீஸ், காதர் நவாஸ் ஷெரீப், அகமது அலி உமாரி ஆகிய 6 நபர்களை கைது செய்து கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் 6 நபர்களையும் 6 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட  'ஹிஸ்ப்-உத் தஹ்ரிர்' என்ற அமைப்புக்கு நேரடியாகவும், யூடுயூப் பிரசங்கங்கள் மூலமாகவும் ஆட்கள் சேர்த்ததும், இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதும், சதிதிட்ட கொள்கைகளை தங்களுக்கும் பரப்பிக்கொண்டதும் NIA அதிகாரிகள் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக, உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட அமைப்புகளிலிருந்து பணபரிவர்த்தனை நடந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், தமிழகத்தில் இருந்துக்கொண்டு இந்தியா பல்வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளில் இருக்கும் இதே அமைப்பைச் சேர்ந்த பலருடன் தொடர்பில் இருந்து வருவதும், இவர்களுடம் வாட்ஸ் அப் கால் மட்டுமல்லாது இணைய கால் செயலிகள் மூலமாகவும் பேசி வந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. மேலும், முதல் வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. 

இந்த நிலையில் தான் முதல் வழக்கில் கைது செய்யப்பட்டப்தஞ்சாவூரை சேர்ந்த அப்துல் ரகுமான், முஜிபுர் ரஹ்மான் (எ) முஜிபுர் ரஹ்மான் அல்தான் சாஹிப் மற்றும் பெங்களூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட அஜீஸ் அஹமது ஆகிய மூவரை கடந்த 19 ம் தேதி மாலை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து அவர்களிடம் தீவிர விசாரணையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அவர்களிடம் நடத்தப்பட்டு வாக்குமூலங்கள் பெறபட்டதன் அடிப்படையில் சென்னையில் எங்கெல்லாம் ஒருங்கிணைப்பு குழு நடத்தி அதன் மூலம் 'ஹிஸ்ப்-உத் தஹ்ரிர்' அமைப்புக்கு ஆட்கள் சேர்க்கப்பட்டது. என்னவெல்லாம் சதித்திட்டங்கள் தீட்டப்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள இன்று காலை முதல் சோதனை நடத்தப்பட்டு வருவதாக NIA அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதன் அடிப்படையில், சென்னையில் 10 இடங்களிலும் கன்னியாக்குமரியில் ஒரு இடம் என மொத்தம் 11 இடங்களில் சோதனை NIA அதிகாரிகள் சோதனை நடைபெற்றது.சென்னையில், சிட்டலபாக்கம், வண்டலூர், வெட்டுவாங்கேணி, திருவல்லிக்கேணி, ஏழு கிணறு, நன்மங்கலம், ராயப்பேட்டை வண்ணாரப்பேட்டை நீலாங்கரை ஆகிய 9 இடங்களிலும், கன்னியாகுமரியில் ஒரு இடத்திலும் இன்று காலை முதல் NIA சோதனையானது மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் அனைத்து இடங்களிலும் சோதனை நிறைவுற்றது.  குறிப்பாக, 11 சந்தேக நபர்களின் வீடுகளில் விரிவான சோதனை நடத்தி, டிஜிட்டல் சாதனங்கள், கணக்கில் வராத பணம், ஹிஸ்ப்-உத் தஹ்ரிர் அமைப்புக்கு சொந்தமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.சோதனையில், ஏற்கனவே கைது செய்யப்பட்ட டாகடர் ஹமீது ஹுசைன் என்பவர் தான் முக்கிய புள்ளியாக செயல்பட்டு தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆட்கள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் என்பதும் தேச விரோத செயலுக்கான சதித்திட்டம் தொடர்பாக வெளிட்டிலுள்ள தடை செய்யப்பட்ட அமைப்பினருடன் பேசி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஹமீது உசேன் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில்  கூட்டங்களை நடத்தி ஆட்சேர்க்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார் எனவும் NIA அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.மேலும், இந்த 'ஹிஸ்ப்-உத் தஹ்ரிர்' அமைப்பு தொடர்பான வழக்கு விசாரணையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow