மஹாளய அமாவாசை.... நாள், நேரம் மற்றும் பலன்கள்!

நிறைவேறாத ஆசைகளுடன் இறந்தவர்களுக்கு இந்த மஹாளய அமாவாசையின்போது திதி கொடுத்தால் அவர்களது ஆன்மா சாந்தி அடையும் என்பது நம்பிக்கை.

Sep 26, 2024 - 23:12
 0
மஹாளய அமாவாசை.... நாள், நேரம் மற்றும் பலன்கள்!
மஹாளய அமாவாசை.... நாள், நேரம் மற்றும் பலன்கள்!

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மிக மிக முக்கியமாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அமாவாசை திதியன்று மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது இந்து மதத்தினரின் பாரம்பரியமாகும். இந்த திதி கொடுக்க ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் மஹாளய அமாவாசை  சிறப்பானது. அதிலும் மஹாளய அமாவாசை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 

இந்த மஹாளய அமாவாசைக்கு சர்வ பித்ரி அமாவாசை, பித்ர மோக்‌ஷ அமாவாசை, பித்ரு அமாவாசை உள்ளிட்ட பலப் பெயர்கள் உள்ளட்ன. இந்த நாளை, நவராத்ரி பண்டிகையின் முதல் நாளாகவும் கருதப்படுகிறது. 9 நாட்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் இந்த நவராத்திரி பூஜை துர்கை அம்மனுக்காகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் செய்யப்படும் சடங்குகளில் முன்னோர்களிடம் ஆசி பெறுவதற்கான பூஜைகள், பிண்ட தானம் மற்றும் பித்ரு தர்ப்பணம் ஆகியவை அடங்கும். மேலும் ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம், உடுப்புகள் உள்ளிட்டவை வழங்குவது கூடுதல் சிறப்பாகும். 

இந்த ஆண்டுக்கான மஹாளய அமாவாசை அக்டோபர் 2ம் தேதி வருகிறது. அக்டோபர் 1, இரவு 9:39 மணிக்குத் தொடங்கும் அமாவாசை திதியானது அக்டோபர் 3, அதிகாலை 12:18 மணிக்கு நிறைவு பெருகிறது. சடங்குகளைச் செய்வதற்கான முக்கிய காலகட்டங்களில் குதுப் முஹூர்தா 11:12 முதல் மதியம் 12:00 மணி வரை, மற்றும் ரௌஹின் முஹூர்தா மதியம் 12:00 முதல் 12:47 வரை செய்யலாம். மதியம் 12:47 மணி முதல் 3:11 மணி வரை இந்த சடங்குகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

"மறந்து போனவனுக்கு மஹாளய அமாவாசை " என்பார்கள். அதாவது முன்னோர்களின் இறந்த தேதி தெரியாதவர்கள் அல்லது மறந்து போனவர்கள் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால் 21 தலைமுறைகளை சேர்ந்த முன்னோர்கள் சொர்க்கத்தை அடைவார்கள் என்பது நம்பிக்கை. இது பற்றிய குறிப்புகள் திருவெண்காடு கோயில் தல வரலாற்றில் இடம்பெற்றுள்ளன.

நிறைவேறாத ஆசைகளுடன் இறந்தவர்களுக்கு இந்த மஹாளய அமாவாசையின்போது திதி கொடுத்தால் அவர்களது ஆன்மா சாந்தி அடையும். இதற்காக சிறப்பு ஹோமங்களும் யாகங்களும் செய்யலாம். தர்ப்பணம் புரிவோர் நதி அல்லது குளத்தில் நீராட வேண்டும். காசி, பத்ரிநாத், திருக்கோகர்ணம், திலதர்பணபுரி,காவிரி சங்கமம், கயா,திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில், கும்பகோணம் மகாமக குளம், இராமேஸ்வரம் முதலிய இடங்களில் உள்ள தீர்த்தங்களில் நீராடினால் மிகவும் விசேஷமானது.

மேலும் படிக்க: ஸ்டாலினின் டெல்லி பயணமும் பூஜ்ஜியம்தான்! - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்

‘எள்’ அனைத்து வகையான பாவங்களையும், தோஷங்களையும் போக்கக்கூடியதாகக் கருதப்படுகிறது. எனவே பித்ருக்களுக்கு திதி கொடுக்கும் பொருட்களில் எள் இருப்பதை உறுதி செய்யவேண்டும். நீர், எள், அட்சதை மூன்றையும் சேர்த்து தருவதே தர்ப்பணம் ஆகும். இவற்றில் கருப்பு எள் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு தர்ப்பணம் செய்வதன் மூலம் முன்னோர்களின் ஆசி முழுமையாகக் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow