செல்வத்தை அள்ளித் தரும் இந்திர ஏகாதசி..... சிறப்புகள் மற்றும் வழிபாட்டு முறைகள்!

இந்திர ஏகாதசி அன்று விரதம் இருந்து விஷ்ணு பகவானை வணங்கினால் இந்திரனுக்கு இணையாக அனைத்து செல்வங்களும் நலன்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

Sep 29, 2024 - 00:05
 0
செல்வத்தை அள்ளித் தரும் இந்திர ஏகாதசி..... சிறப்புகள் மற்றும் வழிபாட்டு முறைகள்!
செல்வத்தை அள்ளித் தரும் இந்திர ஏகாதசி

பௌர்ணமி அடுத்து வரும் 11வது நாளும், அமாவாசை அடித்து வரும் 11வது நாளும் ஏகாதசி என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை வரும் இந்த ஏகாதசி இந்து மதத்தினரிடையே மிகவும் பிரசித்திப் பெற்றதாகப் பார்க்கப்படுகிறது. அதிலும் இந்த புரட்டாசி மாதத்தில் ஏகாதசி மிகவும் சிறப்புமிக்கதாகும். இந்த மாதத்தின் கிருஷ்ண பக்‌ஷத்தில் வரும் ஏகாதசியை இந்திர ஏகாதசி என்று அழைப்பர். இந்த நாளில் விரதம் இருந்து விஷ்ணு பகவானை வணங்கினால் இந்திரனுக்கு இணையாக அனைத்து செல்வங்களும் நலன்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. 

அதன்படி இந்திர ஏகாதசி இன்றும் நாளையும் கருதப்படுகிறது. இந்த நாட்களில் நமது முன்னோர்களை வணங்கி தர்ப்பணம் செய்தால் அவர்களது ஆசி நமக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும் இந்த நாளின் விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்றும் ஏழேழு ஜென்ம பாவங்களும் நீங்கும் என்றும் இறப்பிற்கு பிறகான வாழ்க்கை நிம்மதியும் சந்தோஷமாகவும் இருக்கும் என்றும் நம்பப்படுகிறது. நாளை (செப். 29) காலை 5:37 மணி முதல் காலை 8:01 மணி வரை முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யலாம். 

இந்திர ஏகாதசி நாளில் அதிகாலை நீராடி, சுத்தமான ஆடை அணிந்து, விரதம் இருக்க ஆரம்பிக்க வேண்டும். உங்கள் முன்னோர்களை நினைத்து அவர்களுக்கும் சேர்த்து அஞ்சலி செலுத்தலாம். மகாவிஷ்ணுவின் சிலை அல்லது படத்தை வீட்டின் பூஜை அறையில் வைத்து நெய் தீபம் ஏற்றவும். அந்த தீபத்தை நான்கு முக தீபமாக ஏற்றுவது இன்னும் சிறப்பு. இந்திர ஏகாதசி நாளில் நான்கு முக தீபம் ஏற்றி விளக்கேற்றினால், உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. விஷ்ணு பகவான் மஞ்சள் நிறத்தை மிகவும் விரும்புபவர் என்பதால், அவருக்கு மஞ்சள் நிற பூக்கள் மற்றும் இனிப்புகளை வைத்து வழிபட வேண்டும்.

சிறப்புமிக்க இந்திர ஏகாதசியன்று நான்கு முக விளக்க ஏற்றும்போது ஆன்மிக வளர்ச்சி ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும் மனத்தெளிவு ஏற்படுவதாகவும் சொல்லப்படுகிறது. நான்கு சுடர்களும் நான்கு வேதங்களாகக் கருதப்படுவதால், ஒருவரது அறியாமை, மனக்குழப்பம் நீங்கி, ஆற்றல் அதிகரித்து உண்மையான திறமை வெளிப்படும் என்பது ஐதீகம். 

மேலும் படிக்க: “கேப்டன் மக்கள் சொத்து... விஜயகாந்த் நினைவுகளை கொண்டாடலாம்..” லப்பர் பந்து பார்த்து எமோஷனலான பிரேமலதா

மேலும் இந்திர ஏகாதசியன்று ஏற்றப்படும் நான்கு முக விளக்கு மகாலட்சுமியின் அருளைப் பெற்றுத்தரும் என்பதால் குடும்பத்தில் செல்வ செழிப்பும், நிறைவான செல்வ வளமும் ஏற்படும் என்பது ஐதீகம். நிதி நிலையில் நிலைத்தன்மையையும், பாதுகாப்பையும் தருகிறது. மேலும் இது குடும்பத்தின் வளர்ச்சி, மகிழழ்ச்சி, நன்மைகள் பெருகுவதற்கு வழி செய்யும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow