சீனாவில் அறிமுகமான Redmi Note 14 5G சீரிஸ்!
Redmi Note 14 5g Series Launch in China : சீன ஸ்மார்ட் போன் மற்றும் எலெக்ட்ரானிக் தயாரிப்பு நிறுவனமான Xiaomi தற்போது தனது புதிய தயாரிப்பான Redmi Note 14 5G ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய Redmi Note 14 5G சீரிஸில் Redmi Note 14 Pro மற்றும் Redmi Note 14 Pro+ ஆகிய இரண்டு மாடல்கள் அறிமாகியுள்ளன. இதனுடன் சேர்ந்து Redmi Buds 6 இயர்பட்களும் அறிமுகமாகியது.
Redmi Note 14 5g Series Launch in China : இந்த ஃபோன் தண்ணீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான IP69 மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. பாதுகாப்பிற்காக இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் OIS-செயல்படுத்தப்பட்ட கேமரா ஆகியவற்றைப் பெறுகிறது. இது 6200mAh பேட்டரி மற்றும் 90W சார்ஜிங் உடன் வருகிறது.
Redmi Note 14 5G
டிஸ்பிளே:
Redmi Note 14 Pro+ ஸ்மார்ட் போன் Corning Gorilla Glass Victus 2 பாதுகாப்புடன் 6.67-இன்ச் 1.5K OLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே 3000நிட்ஸ் Peak Brightness மற்றும் 120 Hz Refresh Rate உடன் வருகிறது.
பின்பக்க கேமரா:
OIS ஆதரவுடன் 50 மெகாபிக்சல் டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த அமைப்பில் 50MP முதன்மை கேமரா, 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் (Sony IMX355) மற்றும் 50MP போர்ட்ரெய்ட் (Samsung S5KJN1) டெலிஃபோட்டோ சென்சார் உள்ளது. அதே நேரத்தில், செல்ஃபிக்காக 20MP (OmniVision OV20B) கேமரா உள்ளது.
பேட்டரி:
6,200mAh பேட்டரியைக் கொண்டுள்ள இந்த போன், 90W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும். இந்த பேட்டரி அளவைப் பார்க்கும்போது, ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், நாள் முழுவதுக்கும் தாராளாமாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
OS:
Android 14 அடிப்படையிலான HyperOS-ல் இயங்குகிறது.
பிற அம்சங்கள்:
இரட்டை ஸ்பீக்கர்கள், ஐஆர் பிளாஸ்டர் மற்றும் இன்-ஸ்கிரீன் கைரேகை ஆகியவை இந்த புதிய ஸ்மார்ட் போனில் உள்ளன. அதுபோக தொலைபேசி IP69 மதிப்பீட்டுடன் வரும் இது, தூசி மற்றும் தண்ணீருக்கு எதிரான பாதுகாப்பை உறுதி செய்கிறது.
மேலும் படிக்க: ஜப்பானில் மகனுக்கு திருமணம்... சொகுசு கப்பலில் டூர்... நெப்போலியன் வெளியிட்ட வைரல் வீடியோ!
Redmi Note 14 Pro Plus ஆனது Redmi Note 13 Pro Plus இன் அதே டிஸ்ப்ளே அளவைக் கொண்டுள்ளது. இதில் புதுப்பிப்பு விகிதம் மற்றும் பேனல் ஆகியவை அடங்கும். MediaTek Dimensity 7200-Ultra சிப்செட்டுடன் ஒப்பிடும்போது சமீபத்திய Qualcomm Snapdragon 7s Gen 3 சிப்செட் போனில் கிடைக்கிறது.
What's Your Reaction?