Actor Nepoleon Viral Video : கோலிவுட்டின் எட்டுப்பட்டி ராசாவாக வலம் வந்த நெப்போலியன், தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். புது நெல்லு புது நாத்து படத்தில் தனது திரை பயணத்தை தொடங்கிய நெப்போலியன், ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய் என கோலிவுட் டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். சினிமாவில் இருந்து அரசியலுக்குச் சென்ற அவர், இப்போது அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்டார். சாஃப்ட்வேர் தொழில் கொடிகட்டி பறக்கும் நெப்போலியன், தனது மகன் தனுஷின் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளார்.
அதன்படி நெப்போலியனின் மகன் தனுஷ், அக்ஷயா ஆகியோரின் திருமணம் நவம்பரில் நடைபெறவுள்ளது. சொந்த நாடான இந்தியாவும் இல்லாமல், செட்டிலாகிவிட்ட அமெரிக்காவும் இல்லாமல் ஜப்பானில் தனது மகன் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளாராம் நெப்போலியன். இதனையடுத்து அமெரிக்காவில் இருந்து கனடாவுக்கு சாலை வழியாக சென்ற நெப்போலியனும் அவரது குடும்பத்தினரும், அங்கிருந்து ஜப்பானுக்கு சொகுசு கப்பலில் பயணம் செல்கின்றனர். கடந்த 7 நாட்களாக சில்வர் நோவா என்ற சொகுசு கப்பலில் பயணிக்கும் நெப்போலியன், அங்கு எடுக்கப்பட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
தான் பயணிக்கும் கப்பலில் பிரம்மாண்டமான நீச்சல் குளம் இருப்பதாக அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ள நெப்போலியன், அங்கு ஒரே நேரத்தில் கப்பலில் இருக்கும் அனைவருமே சன் பாத் எடுக்க முடியும் எனக் கூறியுள்ளார். அதற்காக அங்கு அமைக்கப்பட்டுள்ள சாய்வு நாற்காலிகள் அட்டகாசமாக உள்ளன. அதேபோல், அந்த கப்பலின் 10வது, 11வது டெக்கில் நடை பயிற்சி செய்யவும், ரன்னிங் செய்யவும் தனியாக ட்ராக் அமைக்கப்பட்டுள்ளதையும் அந்த வீடியோவில் பதிவு செய்துள்ளார். அதேபோல் மது பிரியர்களுக்கு சூப்பரான பாரும் இந்த கப்பலில் உள்ளது.
அடுத்து கப்பலில் பயணிப்பவர்கள் சமையல் செய்ய பயிற்சி எடுக்க வேண்டும் என்றால், அதற்கு தனியாக ஒரு வகுப்பு நடத்தப்படுகிறது. அதையும் தனது குடும்பத்தினருடன் சுற்றிக் காட்டும் நெப்போலியன், அப்படியே கப்பலில் இருக்கும் ரெஸ்டாரண்டையும் ஒரு ரவுண்டு வருகிறார். இந்த சொகுசு கப்பல் பயணத்துக்காகவே நெப்போலியன் பல கோடிகளை செலவு செய்திருப்பார் என நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். நெப்போலியன் ஷேர் செய்துள்ள வீடியோவில், அவரது மனைவி, மகன் ஆகியோரும் உள்ளது குறிப்பிடத்தக்கது.