தமிழ்நாடு

கண்டெய்னரில் பணம் கடத்தல்.. கொள்ளையர்களின் திட்டம் என்ன? - அதிர்ச்சி வாக்குமூலம்

ATM Robbers Arrest in Namakkal : ஏடிஎம் பணத்தை கொள்ளையடித்து கண்டெய்னர் மூலம் கொண்டு செல்ல திட்டமிட்டது எப்படி? என கைதான கொள்ளையர்களின் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கண்டெய்னரில் பணம் கடத்தல்.. கொள்ளையர்களின் திட்டம் என்ன? - அதிர்ச்சி வாக்குமூலம்
கண்டெய்னரில் பணம் கடத்த திட்டமிட்டது எப்படி என கொள்ளையர்கள் வாக்குமூலம்

ATM Robbers Arrest in Namakkal : கேரளா திருச்சூரில் காலை இரண்டரை மணி முதல் 4 மணிக்குள்ளாக மூன்று எஸ்பிஐ ஏடிஎம்களை குறி வைத்து கொள்ளையடித்துள்ளனர். திருச்சூரில் மப்ரனம் என்ற இடத்தில் உள்ள ஏ.டி.எம். இல் இருந்து 35 லட்ச ரூபாய் பணமும், சோரனூர் சாலையில் உள்ள ஏடிஎம்மில் ஒன்பதரை லட்சம் பணமும் கொலஷி என்ற இடத்தில் உள்ள ஏடிஎம்மில் 25 லட்ச ரூபாய் பணம் என 70 லட்ச ரூபாய் அளவிற்கு ஏடிஎம்மில் கொள்ளையடித்து இருக்கின்றனர்.

நான்கு பேர் கொண்ட முகமூடி அணிந்து கொண்டு கேரளாவில் இந்த கொள்ளை சம்பவத்தை நிகழ்த்திய உடன், கண்டைனர் லாரியில் தாங்கள் வந்த சொகுசு காரையும் ஏற்றுக் கொண்டு கொள்ளையடித்த பணத்தோடு தப்பித்துள்ளனர். நாடு முழுவதும் கேஸ் வெல்டிங் மிஷின் மூலம் ஏடிஎம்களை கொள்ளை அடிக்கும் ஹரியானா மேவாட் கொள்ளையர்கள்(Haryana Mewat Robbers Gang) என விசாரணையில் தெரியவந்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளுக்கும் அருகே இருக்கும் ஏடிஎம்களை குறி வைத்து வெல்டிங் மிஷினால் ஏடிஎம்களில் பணத்தை கொள்ளையடிப்பதையே இந்த கொள்ளையர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர். தகவல் தெரிந்தவுடன் கேரளா திருச்சூர்(Kerala ATM Robbery) போலீசார் அருகில் இருக்கும் பாலக்காடு கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய பகுதிகளில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கொள்ளையர்கள் பாலக்காடு சுங்கச்சாவடிகள் இரண்டை தவிர்த்து மாநில நெடுஞ்சாலை வழியாக சென்றதாகவும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து தப்பித்து தமிழ்நாட்டு எல்லைக்குள் வந்தபோது ஈரோடு சேலம் சாலையில் வரும்பொழுது தமிழக காவல்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

போலீசார் தங்களை பிடித்து விடுவார்களோ என போலீசார் நிறுத்தியும், கண்டெய்னர் ஆரியை வேகமாக இயக்கியுள்ளனர் இதனை எடுத்து வாகனத்தில் விரட்டிச் சென்று பிடித்துள்ளனர். சினிமா பாணியில் விரட்டிப்பிடித்து போலீசார் சுற்றி வளைத்தவுடன், உள்ளே இருப்பவர்கள் ஆயுதங்களுடன் தாக்க முயற்சித்துள்ளனர். அவ்வாறு தாக்கம் முற்பட்டபோது காவல்துறை தரப்பிலும் துப்பாக்கிச் சூடு நடத்தி கொள்ளையர்களை வளைத்து பிடித்தனர்.

இதில் கொள்ளையனான கண்டெய்னர் லாரி ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். காயம் அடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். விசாரணையின் போது ஏற்கனவே கேரளா போலீசாரின் தகவல் தெரிய வந்தது. இதையடுத்து தமிழக காவல்துறையினர் கேரளாவில் கொள்ளையடித்த வட மாநில ஏடிஎம் கொள்ளை கும்பல் என்பது உறுதி செய்யப்பட்டது.

தென்னிந்தியாவில் கடந்த ஆறு மாதத்தில் மட்டும் 15க்கும் மேற்பட்ட ஏடிஎம்களை வெல்டிங் மிஷின் வைத்து கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது. சொகுசு காரில் வந்து நோட்டமிட்டு தேசிய நெடுஞ்சாலை அருகில் இருக்கும் எஸ்பிஐ ஏடிஎம்களை அதிகாலையில் கொள்ளை அடித்து கண்டெய்னர் லாரியில் தப்பிச் செல்வதையே வாடிக்கையாக இந்த மேவாட் கொள்ளையர்கள் கொண்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து அந்த கொள்ளை கும்பலைச் சேர்ந்த மற்ற நபர்கள் யார் என்பது குறித்து விரிவான விசாரணையை நாமக்கல் போலீசார் தீவிரமாக நடத்தினர். இந்நிலையில், கொள்ளையர்கள் எப்படி தங்களது கொள்ளை திட்டத்தை செயல்படுத்தினர் என்று வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கொள்ளையர்கள் கண்டெய்னர் லாரியில் டெல்லி இருந்து இருவர் மீனபாக்கம் வந்துள்ளனர். பின்பு கிரிஸ்ட்டா காரில் மூவரும், ஏர் இந்தியா விமானம் மூலமாக இருவரும் சென்னை வந்துள்ளனர். பின்னர், சென்னை மீனம்பாக்கம் அருகே கண்டெய்னர் லாரியில் இருந்த சரக்குகளை இறக்கியுள்ளனர். 

பின்னர் அனைவரும் ஒன்றுக்கூடி திட்டமிட்டுவிட்டு கேரளா நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளனர். தமிழக எல்லையை தாண்டியவுடன், கண்டெய்னர் உள்ளே காரை ஏற்றிவிட்டு கேரளாவுக்கு சென்றுள்ளனர். கேரளா சென்றவுடன் காரை கண்டெய்னரில் இருந்து இறக்கியதும், கூகுள் மேப் மூலமாக நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள ஸ்டேட் பேங்க் ஏடிஎம்களை தேடியுள்ளனர். கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி விட்டு மீண்டும் காரை கண்டெய்னருக்குள் ஏற்றி விட்டு தப்பும்போது பிடிபட்டுள்ளனர்.

ஆந்திரா மாநிலம் கடப்பா, கிருஷ்ணகிரி போன்று ஆந்திரா, தமிழக மாவட்டங்களில் ஏற்கனவே கைவரிசை காட்டி இருப்பதால், கேரளாவை தேர்ந்தெடுத்தாகவும் கைதான கொள்ளையர்கள் வாக்குமூலம் அளித்தனர். சென்னை அல்லது பெங்களூர் சென்று விட்டு பணத்தை பிரித்து கொண்டு, இருவர் மட்டும் கண்டெய்னர் மற்றும் காரில் பயணிக்கவும் திட்டமிட்டுள்ளதாக வாக்குமூலம் அளித்தனர்.

கொள்ளையர்கள் சபி, சவிக்கின் ஆகிய இருவர் விமானம் மூலம் சென்னை வந்துள்ளனர். மேலும், தற்போது கைதான சிலருக்கு, 2021 கிருஷ்ணகிரி ஏடிஎம் கொள்ளை வழக்கில் தொடர்பு இருக்கலாம் எனவும், கொலை வழக்குகளும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.