Samsung Galaxy S25 Ultra... ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு ஒரு ஹேப்பியான செய்தி!

சாம்சங் நிறுவனம் தனது Galaxy S25 சீரிஸில் Samsung Galaxy S25 Ultra என்ற புதிய மாடலை உலக சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Sep 24, 2024 - 23:56
 0
Samsung Galaxy S25 Ultra... ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு ஒரு ஹேப்பியான செய்தி!
Samsung Galaxy S25 Ultra

தென்கொரியாவை சேர்ந்த ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங், தனது புதிய தயாரிப்பு ஒன்றை களமிறக்கக் காத்திருக்கிறது. அண்மையில் வெளியான சில தகவல்களின்படி சாம்சங் நிறுவனம் தனது Galaxy S25 சீரிஸில் Samsung Galaxy S25 Ultra என்ற புதிய மாடலை உலக சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது. தொடக்கத்தில் இந்த புதிய மாடல் ஸ்மார்ட்போன் Exynos chipset கொண்டுள்ளது என்று வதந்திகள் வந்த நிலையில், தற்போது Snapdragon SoCs அம்சம் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த சரியான தகவல்கள் ஏதும் அதிகாரப்பூர்வமாக சாம்சங் நிறுவனம் வெளியிடவில்லை. 

தற்போது வெளியான சில தகவல்களின்படி புதிய Samsung Galaxy S25 Ultra ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் அல்லது அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

6.83 இன்ச் ஸ்கிரீன் சைஸ் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 144 Hz Refresh Rate, 1440 x 3088 pixels, 20.5:9 ratio ரிசொல்யூஷன் ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 162.2 mm * 78.7 mm அளவுடன் கூடிய இந்த புதிய போன் 230 கிராம் எடைகொண்டதாகும். 

கேமரா: 

பின்பக்க கேமராவில் 200 MP, f/1.8, 50 MP, f/2.2, (Ultra Wide),  10 MP, f/2.4, (Telephoto),  12 MP, f/4.9, (Periscope ) உள்ளிட்டவை அடங்கியுள்ளன. இதன் காரணமாக டிஜிட்டல் Zoom, Auto Flash, Face detection, Touch to focus உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. முன்பக்க கேமரா 50 MP ஆகும். 

ஸ்டோரேஜை பொருத்தவரை 256GB 12GB RAM, 512GB 12GB RAM, 1TB 12GB RAM ஆகிய வேரியண்ட்கள் இருக்கின்றன. 

மேலும் படிக்க: 'தல' ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வெறித்தனமாக கம்பேக் கொடுக்கும் அஜித்.. என்ன விஷயம்?

டைட்டேனியம் பிளாக், டைட்டேனியம் மஞ்சள், டைட்டேனியம் கிரே, டைட்டேனியம் வயலெட் மற்றும் டைட்டேனியம் பச்சை ஆகிய வண்ணங்களில் இந்த புதிய Samsung Galaxy S25 Ultra ஸ்மார்ட்போன் கிடைப்பதாகக் கூறப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow