Hezbollah : ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸரல்லா மரணம்.... கொண்டாடிய இஸ்ரேல் ராணுவம்!

Hezbollah Leader Hassan Nasrallah Death : நேற்று இரவு லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய விமானப்படை தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸரல்லா மரணமடைந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

Sep 28, 2024 - 16:02
Sep 28, 2024 - 16:38
 0
Hezbollah : ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸரல்லா மரணம்.... கொண்டாடிய இஸ்ரேல் ராணுவம்!
ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸரல்லா மரணம்

Hezbollah Leader Hassan Nasrallah Death : இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போர் நடந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் காஸாவில் இதுவரை 35,000க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி விட்டனர். மேலும் காஸா நகரில் வீடுகள், மருத்துவனைகள் என அனைத்து கட்டடங்களும் இடிந்து முற்றிலுமாக தரைமட்டமாகியுள்ளன.

இதனால் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் காஸாவில் இருந்து வெளியேறி உணவு, உடை, மருத்துவ வசதிகளில் இன்றி பரிதவித்து வருகின்றனர். இந்த போரை உடனடியாக நிறுத்தும்படி ஐநா சபை இஸ்ரேலை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும் பல்வேறு உலக நாடுகள் வழியுறுத்தியும் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த மறுத்து வருகிறது. 

போர் விதிகளை தொடர்ந்து மீறி வரும் இஸ்ரேல் ராணுவம் மருத்துவமனைகள் மீதும், பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களிலும் தாக்குதல் நடத்தி வருவது உலக நாடுகளை கவலையடைச் செய்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு கூட தெற்கு காஸாவில் உள்ள கான் யூனிஸ் என்ற நகரில் உள்ள நிவாரண முகாம்களில் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து விட்டனர். 

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரையில் இந்த போரை நிறுத்த மாட்டோம் என்பதில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதியாக உள்ளார். இந்நிலையில் நேற்று இரவு லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய விமானப்படை தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸரல்லா மரணமடைந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. 

யார் இந்த ஹசன் நஸரல்லா? 

ஒரு சாதாரண காய்கறி விற்கும் கூலித் தொழிலாளியின் மகன் ஹசன் நஸரல்லா(Hassan Nasrallah). இவர் சிறுவனாக இருந்தபோது லெபனான் உள்நாட்டு போரில் சிக்கியிருந்தது. மறுபக்கம் லெபனானை இஸ்ரேல் கடுமையாகத் தாக்கியது. இதையெல்லாம் பொருத்துக்கொள்ள முடியாத ஹசன் நஸரல்லா, ஆயுதம் ஏந்திய போராட்டம்தான் நாட்டை காப்பதற்கான ஒரே வழி என முடிவெடுத்து ஷியா இஸ்லாமிய போராளி குழுவில் இணைந்தார். 

ஒரு கட்டத்தில் லெபனானை கைப்பற்றிய இஸ்ரேலை எதிர்க்க உறுதியான அமைப்பு தேவை என்று முடிவெடுத்த போராளி குழுக்கள் ஹிஸ்புல்லா(Hezbollah) என்ற அமைப்பை உருவாக்கின. இந்த அமைப்பில் இணைந்த நஸரல்லா, தனது அறிவு மற்றும் திறனால் இயக்கத்திற்குள் வேகமாக வளர்ந்தார். இது அவரை 32 வயதிலேயே ஹிஸ்புல்லாவின் தலைவராக்கியது. 

மேலும் படிக்க: வீடு வரை ஃபாலோ பண்ண ரசிகர்... வார்னிங் கொடுத்த பிரியங்கா மோகன்... இந்த பொழப்புக்கு!

ஹிஸ்புல்லாவுக்கு என ஒரு பெரும் சித்தாந்த கட்டமைப்பையே உருவாக்கிய, ஒரு அரசியல் சக்தியாக மிக வேகமாக வளர்ந்தார். லெபனான் அரசு ராணுவத்தை விட அதிக ஆயுதங்களை ஹிஸ்புல்லா அமைப்பு வைத்திருக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow