Reliance Jio New Recharge Plan 2024 in Tamil : இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு சேவை நிறுவனமாக முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்களின் விருப்பத் தேர்வாக இருந்த ஜியோ நெட்வொர்க் அண்மையில் அதன் ரீசார்ஜ் பிளான்களின் விலையை அதிரடியாக உயர்த்தியது. இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள், மலிவான திட்டங்கள் வழங்கும் நெட்வொர்க் சேவையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக வாடிக்கையாளர்களின் அடுத்தத் தேர்வாக பிஎஸ்என்எல் ஆனது.
இது ஒரு பக்கமிருக்க, மறுபக்கம் ஏர்டேல் மற்றும் ஐடியா நிறுவனங்களும் தங்களது ப்ரீபெயிட் மற்றும் போஸ்ட் பெயிட் திட்டங்களின் கட்டணங்களை 15% வரை அதிகரித்துள்ளது. இந்த சூழ்நிலையில் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்வதற்காக ஜியோ நிறுவனம்(Jio) தற்போது அடிரடியான ரீசார்ஜ் பிளான்களைக்(Recharge Plan) களமிறக்கியுள்ளது.
அதன்படி ஜியோவில்(Jio Recharge Plan) நீங்கள் ரூ.999க்கு ரீசார்ஜ் செய்தால் 98 நாட்களுக்கு 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், 100 எஸ்.எம்.எஸ் மற்றும் இலவச அன்லிமிட்டட் 5ஜி டேட்டாவை பெறுவீர்கள். இதுமட்டுமில்லாமல், ஜியோ டிவி, ஜியோ கிளவுட் மற்றும் ஜியோ சினிமா ஆகிய ஜியோ ஆப்களுக்கும் இலவச சப்ஸ்கிருப்ஷன் பெருவீர்கள். இந்த திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
மேலும் ஜியோ(Reliance Jio) நிறுவனம் தற்போது புதிய டேட்டா Add -on திட்டங்களையும் அறிமுகம் செய்துள்ளது. அன்லிமிடெட் அப்கிரேட் பிளான் என்ற பெயரில் 51 ரூபாய் , 101 ரூபாய் மற்றும் 151 ரூபாய் என மூன்று விலைகளில் இந்த add-on திட்டங்கள் கிடைக்கின்றன. இவை அனைத்தும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் கூடுதலாக 4ஜி டேட்டா ஆகியவற்றை வழங்குகிறது. புதிதாக அறிமுகமாகியுள்ள 51 ரூபாய் அன்லிமிடெட் அப் கிரேட் பிளானில் 3ஜிபி வரை 4ஜி டேட்டா கிடைக்கிறது. 101 ரூபாய் திட்டத்தில்6 ஜிபி வரை 4ஜி டேட்டா கிடைக்கிறது.
மேலும் படிக்க: “தனியா அக்கவுண்ட் கிடையாது... எனக்கு மரியாதையே இல்ல..” டென்ஷனான ஜெயம் ரவி!
ஒரு நாளைக்கு 1.5 ஜிபிக்கும் குறைவான டேட்டா கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு என பிரத்தியேகமாக இந்த பிளான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் ஒரு நாளைக்கு 2 ஜிபி மற்றும் அதற்கு மேல் டேட்டா வரம்பு கொண்ட வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கிறது. இந்த புதிய ரீசார்ஜ் திட்டங்களை ஜியோ வாடிக்கையாளர்கள் ரிலையன்ஸ் ஜியோ இணையதளத்தில் சென்று பெற்றுக்கொள்ளலாம்.