அனிமல் பட இயக்குனருடன் தல தோனி- இணையத்தில் டிரெண்டாகும் விளம்பரம்
ஒரு விளம்பரத்திற்காக தல தோனி, அனிமல் & அர்ஜூன் ரெட்டி படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வாங்காவுடன் இணைந்துள்ளார்.

ஐபிஎல் 18 வது சீசன் வருகிற மார்ச் மாதம் 22 ஆம் தேதி துவங்க உள்ள நிலையில், ஐபிஎல் தொடர்பான அப்டேட்டுகள் வந்த வண்ணம் உள்ளது. ஐபிஎல் தொடர் நெருங்கும் போதெல்லாம் நமது முன்னணி கிரிக்கெட் வீரர்கள் விளம்பரங்களில் தென்படுவதையும் காண இயலும். அந்த வகையில் யாரும் எதிர்ப்பாராத வகையில் கடந்தாண்டு ஹிந்தி பாக்ஸ் ஆபிஸை அலறவிட்ட அனிமல் திரைப்படத்தின் இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்காவுடன் ஒரு விளம்பரத்திற்காக கைக்கோர்த்துள்ளார் நம்ம தல தோனி.
EMotorad விளம்பரம்:
விளம்பரம் இணையத்தில் வெளியானது முதலே பலரால் பகிரப்பட்டு வருகிறது. அதற்கு முக்கிய காரணம் அனிமல் படத்தின் கதாநாயகன் ரன்பீர் கபூருக்கான மாஸ் காட்சிகளை அப்படியே தல தோனி வைத்து மீள் உருவாக்கம் செய்துள்ளார் இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா. EMotorad என்கிற மின்சார சைக்கிள் நிறுவனத்துக்கான (an electric cycle company) விளம்பரத்தில் தான் சந்தீப் ரெட்டி மற்றும் தோனி கைக்கோர்த்துள்ளனர்.
இந்த விளம்பரத்தில் அனிமல் படத்தின் காட்சிகளைப் போல் தோனி மாஸாக வரும் போதெல்லாம், எனக்கான ஹீரோ கிடைத்துவிட்டார் என சந்தீப் கூறுவார். அதற்கு, தோனி இது சைக்கிள் விளம்பரம் தான? இதுக்கு இவ்வளவு மாஸ், பங்க் ஹேர் எல்லாம் தேவையா? என கேட்பார். காட்சிகள் நகைச்சுவையாக உருவாக்கப்பட்டுள்ளதால் சட்டென்று அனைவரின் விருப்பமான விளம்பரமாக தற்போது மாறியுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி தன் முதல் போட்டியில் பரம எதிரியான மும்பை அணியினை வருகிற 23 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்க்கொள்கிறது. இந்த முறை அனைத்து அணிகளும் புதுப்புது வீரர்களுடன் களமிறங்குவதால் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது எனலாம்.
My favourite animal is when DHONI remembers who he is
What's Your Reaction?






