ஆன்லைன் விளையாட்டில் 2 லட்சம் இழப்பு – இளைஞர் எடுத்த விபரீத முடிவு
35 நாட்களுக்கு பின்னர் அழுகிய நிலையில் இருந்த உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூராய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் செந்துறை அருகே குரும்பபட்டி அண்ணா நகரில் வசிப்பவர் ராசு. இவரது மகன் மகேந்திரன் (வயது 32). இவர் பால்மாடு வளர்த்து வருகிறார். பால் விற்பனை செய்வதால் கிடைக்கும் பணத்தில் ஆன்லைன் விளையாட்டில் ஆர்வம் மிகுந்து சில மாதங்களாக விளையாடி வந்ததாக கூறப்படுகிறது.
ஆன்லைன் விளையாட்டு
ஒரு கட்டத்தில் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை தொடர்ந்து இழந்துள்ளார். இழந்த பணத்தை மீட்க வேண்டும் என்பதற்காக கடன் வாங்கி மீண்டும் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு சுமார் 2 லட்சத்திற்கு மேல் இழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த மகேந்திரன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
Read more: சீமை கருவேல மரங்கள்... நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை- ஐகோர்ட் வேதனை
இது குறித்து நத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் செந்துறை அருகே பாலக்குட்டு என்ற மலை உச்சியில் மரத்தில் தூக்கில் தொங்கி அழுகிய நிலையில் சடலம் ஒன்று இருப்பதாக நத்தம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.தகவல் அறிந்து வந்த நத்தம் போலீசார் இறந்தவர் உடலை மீட்ட போது இறந்தது மகேந்திரன் என்பதை உறுதி செய்தனர்.
இளைஞர் விபரீத முடிவு
35 நாட்களுக்கு பின்னர் அழுகிய நிலையில் இருந்த உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூராய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறப்பு குறித்தும் ஆன்லைனில் என்ன மாதிரியான விளையாட்டுகள் விளையாடினார் என்பது குறித்தும் நத்தம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு பணம் இழந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் செந்துறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?






