உதயநிதி Vs பவன் கல்யாண்.. ஒரே வரியில் பதிலடி
சனாதனத்தை ஒழிப்பேன் எனக் கூறுபவர்கள் ஒழிந்துவிடுவார்கள் என ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பேசியதற்கு, “let’s wait and see” என்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி பதிலளித்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ' மலேரியா, டெங்கு நோய்கள் போல, சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என தற்போதைய துணை முதலமைச்சர் உதயநிதி கூறியது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து, உதயநிதிக்கு எதிராக, பல்வேறு மாநிலங்களில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த சூழலில், ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், அண்டை மாநிலத்தை சேர்ந்த இளம் தலைவர் ஒருவர், வைரஸ் போன்ற சனாதன தர்மத்தை அழிக்க வேண்டும் என்றார், ஆனால் சனாதன தர்மத்தை அழிப்பேன் என்று கூறுபவர்கள் தான் அழிந்து போவார்கள்' என
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநியை மறைமுகமாக சாடினார்.
இந்நிலையில், பவன் கல்யாண் பேசியது குறித்து உதயநிதியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு “let’s wait and see” என ஒற்றை வரியில் பதிலளித்துள்ளார்.
What's Your Reaction?






