கொடநாடு கொ*ல, கொள்ளை வழக்கு - நீதிமன்றத்தில் இன்று விசாரணை
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகையில் உள்ள மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில், அவரது மறைவுக்கு பின் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொள்ளை சம்பவத்தின்போது வீட்டின் காவலாளி ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில், இதில் சம்பந்தப்பட்டு இருப்பதாக கூறப்படும் சிலரும் அடுத்தடுத்து உயிரிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பான வழக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் உதகை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், வழக்கு விசாரணை உதகையில் உள்ள மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில், நீதிபதி முரளிதரன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
முந்தைய விசாரணையின் போது, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கேரள மாநிலத்தைச் சோ்ந்த வாளையாறு மனோஜ், அரசு தரப்பு வழக்குரைஞா்கள் ஷாஜகான், கனகராஜ் தரப்பு மற்றும் சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல், சிபிசிஐடி போலீஸாா் ஆகியோா் ஆஜராகினா். அப்போது, இந்த வழக்கில் புலன் விசாரணை நடைபெற்று வருவதால் கூடுதல் அவகாசம் வேண்டும் என்று அரசு தரப்பு வழக்குரைஞா்கள் சாா்பில் கேட்கப்பட்டதால், வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
What's Your Reaction?






