ரெடியா நண்பா, நண்பீஸ்.. நடிகர் விஜய்யே வந்து சொல்லப்போகும் அந்த முக்கிய அறிவிப்பு.. என்ன தெரியுமா?
தமிழக வெற்றி கழக மாநாட்டின் முக்கிய அறிவிப்பை நாளை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றி கழக மாநாட்டின் முக்கிய அறிவிப்பை நாளை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் கட்சி கொடியை அறிமுகம் செய்தார் விஜய். இதன் அடுத்தக்கட்டமாக தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் விஜய், அரசியல் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார். முதல் மாநாடு என்பதால், பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்து, திருச்சி, மதுரை, சேலம், திண்டுக்கல், ஈரோடு என பல்வேறு இடங்களை பரிசீலித்த பிறகு, விக்கிரவாண்டியை இறுதி செய்திருக்கிறார். செப்டம்பர் 23ம் தேதி விக்கிரவாண்டியை அடுத்த வி. சாலை கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெறவுள்ளதாகவும், அதற்காக 100 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை வாடகைக்கு எடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
தவெகமாநாட்டுக்கான அனுமதி கோரி, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், எஸ். பி. அலுவலகத்திலும் கடந்த 28 ஆம் தேதி மனு அளித்திருந்தார். அதே நாளில் ஏ.டி. எஸ்.பி. திருமால், டி.எஸ்.பி. சுரேஷ் ஆகியோர், சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அந்த மனுவை விசாரித்த காவல்துறை இந்த மாநாடு தொடராக 21 கேள்விகள் அடங்கிய கேள்விகளை தமிழக வெற்றி கழகத்தினுடைய பொதுச் செயலாளரிடம் கேட்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் காவல்துறையில் அளிக்கப்பட்ட பதில்கள் குறித்த சில தகவல் வெளியானது. அதில்,மாநாடு நடத்தும் நேரம் - மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை எனவும், மாநாடு மாநாட்டில் எத்தனை நபர்கள் கலந்து கொள்வார்கள் என்ற கேள்விக்கு, ஆண் பெண் முதியவர் விபரம் ஆண்கள்- முப்பதாயிரம், பெண்கள் 15 ஆயிரம், முதியவர் ஐயாயிரம், குழந்தைகளுக்கு அனுமதி இல்லை, மாற்றுத்திறனாளிகள் இருக்கை 500 எனவும், மாநாட்டு பந்தலை ஜேபி எண்டர்பிரைஸ், நேர் பஜனை கோவில் திருவேற்காடு மெயின் ரோடு பூந்தமல்லி திருவள்ளூர் அமைப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் பல முக்கிய தகவல்களை தவெக தலைவர் விஜய்யே அறிவிப்பார் என புஸ்ஸி ஆனந்த தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க: எப்படி முதல்வராக இருந்தீர்கள்.. வயிற்றெரிச்சல்... எடப்பாடி பழனிச்சாமியை தாக்கிய ஆர்.எஸ் பாரதி
இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டை வரும் 23ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது குறித்து நாளை முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாக இருப்பதாகவும், நாளை காலை 11 மணிக்கு வீடியோ மூலம் கட்சித் தலைவர் விஜய் அறிவிக்கவுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி மாதம் கட்சி அங்கீகாரம் கோரி விண்ணப்பித்த நிலையில் 6 மாதம் கழித்து அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும், இந்த அறிப்போடு சேர்த்து மாநாடு தேதி குறித்தும் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
What's Your Reaction?