கோமியத்தில் மருத்துவ குணங்கள் இருப்பதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது - ஐ ஐ டி இயக்குநர் காமகோடி மீண்டும் திட்டவட்டம்

கோமியம் குடித்தால் நன்மை என்று தான் கூறிய கருத்து  தொடர்பான ஆதாரமான அமெரிக்காவை சேர்ந்த National library of medicine ஆய்வு கட்டுரைகளை ஐஐடி இயக்குனர் காமகோடி வெளியிட்டுள்ளார்.

Jan 20, 2025 - 19:09
Jan 20, 2025 - 19:23
 0
கோமியத்தில் மருத்துவ குணங்கள் இருப்பதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது - ஐ ஐ டி இயக்குநர் காமகோடி மீண்டும் திட்டவட்டம்
ஐ ஐ டி இயக்குநர் காமகோடி

கோமியத்தில் மருத்துவ குணங்கள் உள்ளது என்பதற்கான ஆதாரம் உள்ளதாக ஐ ஐ டி இயக்குநர் காமகோடி மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்த நிலையில், அது தொடர்பான  ஆதாரத்தை ஐஐடி இயக்குனர் காமகோடி வெளியிட்டார் 

சென்னை ஐஐடியில் செய்தியாளர்களிடம் பேசிய  ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியதாவது, அமெரிக்காவில் வெளியான இதழ்களில் கோமியத்தில் எதிர்ப்பு சக்தி உள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது. 

பாக்டீரியாவிற்கு எதிராக குணங்கள் கோமியத்தில் உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பொங்கல் விழாவில் இயற்கை விவசாயம், இயற்கை எரிவாயு மற்றும் கோமியம் தொடர்பாக பேசியதில் தான் இந்த விவாதம் எழுந்துள்ளது.  அமேசானில் கூட இது தொடர்பான பஞ்சகவ்யா என்ற பொருள் விற்பனை செய்யப்படுகிறது.

இதில் அரசியல் தொடர்பாக வரும் விவாதங்கள் பற்றி நான் பதில் அளிக்க விரும்பவில்லை இது மிகவும் அறிவியல் பூர்வமானது. அமெரிக்கா போன்ற நாடுகளில் இது தொடர்பான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரத்தை நான் நிரூபிக்க தயாராக இருக்கிறேன்.

கோமியத்தை அருந்தினால் உடல்நல அபாயங்கள் ஏற்படும் என வெளிவந்துள்ள ஆராய்ச்சி தரவுகள் குறித்து நான் படிக்கவில்லை. இது தொடர்பான விவாதம் எழுந்து உள்ளதை நான் நேர்மறையாக பார்க்கிறேன். இது தொடர்பாக ஐஐடி மெட்ராஸில் ஆராய்ச்சி மேற்கொள்ள முயற்சி மேற்கொள்ளப்படும்.

இந்திய அளவில் இந்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. வருஷத்தில் எங்களுக்கு பண்டிகை வரும்போது நாங்கள் பஞ்சகவியம் சாப்பிடுகிறோம். நானும் பஞ்சகாவியம் சாப்பிடுவேன் என்று ஐஐடி இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார். தொடர்ந்து, கோமியம் குடித்தால் நன்மை என்று தான் கூறிய கருத்து  தொடர்பான ஆதாரத்தை வெளியிட்டார். 

கோமியம் குடித்தால் காய்ச்சல் வராது என்பது அமெரிக்க ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவை சேர்ந்த National library of medicine ஆய்வு கட்டுரைகள் வெளியிட்டுள்ளார்‌. காமகோடியின் கருத்தை, அமைச்சர் பொன்முடி, கார்த்திக் சிதம்பரம் உள்ளிட்ட பலரும் விமர்சனம் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow