என் மகனை நான் இப்படியெல்லாம் கஷ்டப்படுத்தினேன்.. மனம் திறந்த ஹிருத்திக் ரோஷன் தந்தை

கரண் அர்ஜுன் படத்தில் ஹிருத்திக் ரோஷன் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

Nov 20, 2024 - 07:10
Nov 20, 2024 - 07:11
 0
என் மகனை நான் இப்படியெல்லாம் கஷ்டப்படுத்தினேன்.. மனம் திறந்த ஹிருத்திக் ரோஷன் தந்தை
என் மகனை நான் இப்படியெல்லாம் கஷ்டப்படுத்தினேன்.. மனம் திறந்த ஹிருத்திக் ரோஷன் தந்தை

1995-ஆம் ஆண்டு இயக்குநர் ராகேஷ் ரோஷன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'கரண் அர்ஜுன்'. இந்த படத்தை ராகேஷ் ரோஷனே தயாரித்தும் இருந்தார். இந்தி மொழியில் உருவான இப்படத்தில் ஷாருக்கான், சல்மான் கான், கஜோல் போன்ற உச்ச நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், வரும் 22-ஆம் தேதி 'கரண் அர்ஜுன்' திரைப்படம் ரீ-ரிலீஸாக உள்ளது.  மேலும், 'கரண் அர்ஜுன்' படப்பிடிப்பின் போது ஹிருத்திக் ரோஷன் அசவுகரியமாக உணர்ந்தது குறித்து ராகேஷ் ரோஷன் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து ராகேஷ் ரோஷன் பேசியதாவது:- 

உயர் படிப்பிற்காக ஹிருத்திக் ரோஷன் வெளிநாட்டிற்கு செல்ல தயாராக இருந்தார். அப்போது அவரிடம் உனக்கு என்னவாக ஆசை என்று நான் கேட்டேன். அதற்கு ஹிருத்திக் ரோஷன் நடிகராக வேண்டும் என்று கூறினார்.

அப்போது நான் முதலில் யாரிடமாவது உதவி இயக்குநராக பணிபுரிய வேண்டும் என்று ஹிருத்திக் ரோஷனிடம் கூறினேன். அதற்கு அவர் என் படத்தில் உதவி இயக்குநராக பணிப்புரிய விருப்பம் இருப்பதாக தெரிவித்தார். அதன் மூலம் தான் 'கரண் அர்ஜுன்' படத்தில் ஹிருத்திக் ரோஷன் உதவி இயக்குநராக சேர்ந்தார்.

படப்பிடிப்பின் போது நான் படப்பிடிப்பு தளத்திற்கு காரில் செல்வேன், ஆனால் ஹிருத்திக் ரோஷன் பேருந்தில் அல்லது ரயிலில் வருவார். நான்கு பேருடன் அறையை பகிர்ந்து கொள்வார். இவ்வாறாக மூன்று படங்களில் பணியாற்றினார்.  அதன்பிறகு 2000-ஆம் ஆண்டு எனது இயக்கத்தில் ‘கஹோ நா பியார் ஹை’ திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். இப்படம் அவருக்கு ஒரு நல்ல வரவேற்பை கொடுத்ததுடன் அவரது தலைமுறை ரசிகர்களை ஈர்க்கவும் உதவியது என்று கூறினார்.

மேலும், இந்த கதை குறித்து நான் நடிகர்கள் சல்மான்கான் மற்றும் ஷாருக்கானிடம் விவரித்த போது சல்மான்கானுக்கு இந்த கதை மிகவும் பிடித்திருந்தது. ஆனால் ஷாருக்கானுக்கு இப்படத்தின் மீது நம்பிக்கை இல்லை, இருந்தாலும் நீங்கள் இயக்கினால் இப்படத்தில் நான் நடிக்கிறேன் என்று கூறியதாக ராகேஷ் ரோஷன் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow