கேல் ரத்னா விருதை வாங்கிய குகேஷ்... Emotional ஆன தந்தை
தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷுக்கு கேல் ரத்னா விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.
தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷுக்கு கேல் ரத்னா விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.
செஸ் வீரர் குகேஷ், ஹாக்கி வீரர் ஹர்மன்ப்ரீத் சிங், பாரா அத்லெட் ப்ரவீன் குமார், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனுபாகர் ஆகிய நால்வருக்கும் ‘கேல் ரத்னா’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ஒன்றிய அரசு கேல் ரத்னா விருது வழங்கி கவுரவிக்கும். அதன்படி நடப்பு ஆண்டிற்கான கேல் ரத்னா விருது பட்டியலை விளையாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 4 பேர் அடங்கிய அந்த பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு கேல் ரத்னா விருது கிடைத்துள்ளது.
What's Your Reaction?