அனுமதியின்றி போராட்டம் செய்தால் அபராதம் - அரசுக்கு நீதிமன்றம் யோசனை..!

அனுமதியின்றி போராட்டம் நடத்தப்படுவது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்திற்கு சுமை ஏற்படுத்துவதை விடுத்து உடனடி அபராதம் விதிக்கலாமே என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசு யோசனை தெரிவித்துள்ளது.

Mar 21, 2025 - 20:12
Mar 23, 2025 - 06:54
 0
அனுமதியின்றி போராட்டம் செய்தால் அபராதம் - அரசுக்கு நீதிமன்றம் யோசனை..!
சென்னை உயர் நீதிமன்றம்

இலங்கை தமிழர்கள்  இனப்படுகொலையை  கண்டித்தும்  ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் கடந்த 2013 மற்றும் 2017 ம் ஆண்டுகளில்  அரியலூரில் ரயில் மறியலில் ஈடுப்பட்டதாக  அமைச்சர் சிவசங்கரன் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு எதிராக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்குகளை ரத்து செய்ய கோரி, அமைச்சர் சிவசங்கரன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த  நீதிபதி இளந்திரையன், ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தி உள்ளதாக கூறி இரு வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.

முன்னதாக நீதிபதி,  அனுமதியின்றி போராட்டத்தில்  ஈடுபட்டதாக வழக்குகள் பதிவு செய்து நீதிமன்றத்திற்கு சுமை ஏற்படுத்துவதற்கு பதில் உடனடி அபராதம் விதிக்கலாமே என அரசு யோசனை தெரிவித்தார்,

இதனையடுத்து இந்த 3 வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி அமைச்சர் சிவசங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்களை கடந்த 17ஆம் தேதி விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், சிவசங்கர் மீதான 3 வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதற்கிடையே கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது விதிகளை மீறியதாக அமைச்சர் பெரிய கருப்பன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் பெரியகருப்பன் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன் அமைச்சர் பெரியகருப்பன் மீதான வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow