முதலமைச்சர் உத்தரவுக்குப் பிறகும்.. நிற்காமல் செல்லும் பேருந்து ?

சிவகங்கை மாவட்டம் சோழபுரத்தில் முதலமைச்சர் உத்தரவின் படி அமைக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்பதில்லை என கல்லூரி மாணவிகள் வேதனை தெரிவித்தனர். கடந்த வாரம் இரண்டு நாள் பயணமாக சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சோழபுரத்தில் தனியார் கல்லூரி மாணவிகளிடம் கலந்துரையாடினார். அப்போது, மாணவிகள் தங்கள் கல்லூரி முன்பு அரசு பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Jan 29, 2025 - 08:51
 0

மாணவிகளின் கோரிக்கையை ஏற்று அந்த இடத்தில் பேருந்து நிறுத்தம் அமைக்க முதலமைச்சர் உத்தரவிட்டார்.  அதனை தொடர்ந்து, அந்த இடத்தில் பேருந்து நிறுத்தம் என்ற பலகை வைக்கப்பட்டு சேவை தொடங்கப்பட்டது. இந்த நிலையில், அந்த இடத்தில் பேருந்துகள் நிற்பதில்லை என மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow