ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தல்.. அமைதியான முறையில் வாக்குசேகரிக்க செல்வப்பெருந்தகை அறிவுரை..!
Erode By Election: ஈரோடு கிழக்குத்தொகுதியில் பணியாற்ற கூடிய காங்கிரஸ் நிர்வாகிகளுடன் தேர்தல் பணிமனையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆலோசனையில் ஈடுபட்டார்.
Erode By Election: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைதேர்தலில் திமுக மற்றும் நாதக ஆகிய இரண்டு கட்சிகளுக்கு மட்டுமே நேரடிப் போட்டி நடைபெறும் சூழலில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில், ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்டு வென்றவர் திருமகன் ஈவேரா. இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு தொடக்கத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததால், இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
இந்த இடைத்தேர்தலில் திருமகன் ஈவேராவின் தந்தையும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். ஆனால், இவரும் கடந்த ஆண்டு (2024) இறுதியில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததால், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வேட்புமனுத்தாக்கல், கடந்த ஜனவரி 17 ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 5ம் தேதி நடைபெறவுள்ளது.இதற்காக 57வாக்குச்சாவடி மையத்தில் 237வாக்குச்சாவடிகளில் 2லட்சத்து 26ஆயிரத்து 433வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
காங்கிரஸ் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் தலைவர் தங்கபாலு , சட்டமன்ற உறுப்பினர்கள் ரூபி மனோகரன் , ராதாகிருஷ்ணன், கணேசன், ராஜ்குமார் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை , எந்தக் கட்சிக்கும் ஏற்படாத சங்கடமான மூன்று ஆண்டுகளில் விலை மதிக்க முடியாத இரண்டு தலைவர்களை இழந்துள்னதாகவும், இது எல்லாம் நாம் தாங்கிக் கொண்டு திமுக வேட்பாளர் சந்திரகுமாரை வெற்றி பெறச் செய்ய 24 மணி நேரம் உழைக்க வேண்டும் என்றார்.
எந்தவித ஆரவாரமும் இல்லாமல் அமைதியான முறையில் வீடு வீடாகச் சென்று வாக்குகள் சேகரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட செல்வப்பெருந்தகை, EVKS இளங்கோவன் இறந்த ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், தூக்கத்திலிருந்து மீளாத நிலையில் மனசாட்சியே இல்லாமல் பாஜக தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்துள்ளது என்றார்.
90 நாட்களாவது அவகாசம் கொடுத்திருக்க வேண்டும் என்று செல்வப்பெருந்தகை மனிதாபமற்ற முறையில் பாஜகவுடைய கட்டளையை ஏற்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. எப்போதும் மக்களை பாதுகாக்கின்ற பணியில் இருந்து காங்கிரஸ் ஒருபோதும் பின் வாங்கியதில்லை என்ற அடிப்படையில் இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் எதிர்கொண்டு திமுக வேட்பாளரை வெற்றியடைய செய்வோம் என்றார்.
What's Your Reaction?