பாலியல் புகார்: ஆசியர்களுக்கு ஆதரவாக ஆஜராகமாட்டோம் - வழக்கறிக்கறிஞர்கள் திட்டவட்டம்

கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆதரவாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் ஆஜராக மாட்டார்கள் என்று வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 

Feb 6, 2025 - 14:02
Feb 6, 2025 - 14:43
 0
பாலியல் புகார்: ஆசியர்களுக்கு ஆதரவாக ஆஜராகமாட்டோம் - வழக்கறிக்கறிஞர்கள் திட்டவட்டம்
பாலியல் புகார்: ஆசியர்களுக்கு ஆதரவாக ஆஜராகமாட்டோம் - வழக்கறிக்கறிஞர்கள் திட்டவட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதனால் அந்த மாணவி கர்ப்பமாகி கருக்கலைப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் மாணவியின் பெற்றோர் உள்பட மற்ற மாணவர்களின் பெற்றோர்களும் இன்று பள்ளியின் முன்பாக போராட்டம் நடத்தினர். குற்றம் செய்த ஆசிரியர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கக்கூடிய 13 வயது பள்ளி மாணவி அந்தப் பள்ளியில் பணியாற்றி வந்த அரசு ஆசிரியர்கள் சின்னசாமி ஆறுமுகம் பிரகாஷ் ஆகியோரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டனர். போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள காமுக அரசு ஆசிரியர்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக போவதில்லை என்று, கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற கமிட்டி மீட்டிங் வழக்கறிஞர்கள் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க அலுவலகத்தில் அதன் தலைவர் கோவிந்தராஜுலு தலைமையில் கூட்டம் நடைபெற்ற நிலையில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் உள்ளிட்ட அனைத்து நீதிமன்ற பார் கவுன்சில்கள் வழக்கறிஞர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து பிப்.8-ல் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். மாணவியை பள்ளி ஆசிரியர்கள் 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சி அளிக்கும் நிலையில், இதனை கண்டித்து கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow