மாணவர்களிடம் தமிழ் மொழியை எளிமையாக சேர்க்க புத்தாக்கப் பயிற்சி..!
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், உலகத் தமிழ் சங்கம் மற்றும் குமரகுரு பன்முக கலை அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தும் தமிழ் ஆசிரியர் மாணவர் புத்தாக்க பயிற்சி நடைபெற்றுவருகிறது.
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், உலகத் தமிழ் சங்கம் மற்றும் குமரகுரு பன்முக கலை அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தும் தமிழ் ஆசிரியர் மாணவர் புத்தாக்க பயிற்சி குமரகுரு கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. இதில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
தமிழ் இலக்கண இலக்கியத்தை மாணவர்களிடம் எளிமையாக ஆசிரியர்கள் கொண்டு சேர்க்க கோவை குமரகுரு கல்லூரியில் தமிழாசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சியை துவக்கி வைத்த அமைச்சர். பின்னர் செய்தித்துறை அமைச்சர் சுவாமிநாதன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ் வளர்ச்சி துறை சார்பாக பல்வேறு நிகழ்ச்சி நடத்தி வருகிறோம் தமிழ் மொழி புத்தாக்க பயிற்சி சார்பில் கோவையில் உள்ள குமரகுரு கல்லூரியில் ஒத்துழைப்போடு தமிழ் ஆசிரியர் மற்றும் மாணவர் செல்வங்கள் இந்த நிகழ்ச்சியை துவக்கி உள்ளோம். பிறமொழிகள் ஆதிக்கம் காரணமாக தாய்மொழி மெல்ல, மெல்ல தமிழர்களுடைய இடைவெளி ஏற்படுகிறது. அதனை தடுக்கின்ற வகையில் இந்த மொழிக்கு புத்தாக்க பயிற்சி உருவாக்கி மாணவர் செல்வங்களுக்கு ஆசிரிய பெருமக்களுக்கும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து இந்த பயிற்சி பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் வளர்ச்சி துறையில் இளங்கலை தமிழ் இலக்கியம் பெற்றவர்களுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் உதவி இயக்குனர் பணியிடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. விரைவில் பணி நியமன் ஆணை வழங்கப்படும் என்றார். தமிழ்நாடு முழுவதும் பலகையில் தமிழ் மொழி பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு வரவேண்டும். விரைவில் தமிழ் மொழி உரிய அங்கீகாரம் பெற்று பெயர் பலகை இடம்பெற வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம் என்று கூறினார்.
இதற்கு முன்பு தமிழ் வளர்ச்சித் துறையில் உதவி இயக்குனர் பொறுப்பு பெற வேண்டும் என்றால் முதலில் தட்டச்சர் ஆக அரசு பணிபுரிந்து அதன் பிறகு கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று அதற்கடுத்து தான் உதவி இயக்குனராக பணி உயர்வு பெற முடியும் சூழல் இருந்தது. தற்போது இளங்கலை தமிழ் இலக்கியம் பயின்ற மாணவர்கள் தமிழ் வளர்ச்சித் துறையில் மாவட்ட அளவிலான உதவி இயக்குனர் பொறுப்பை பெறக்கூடிய சூழலை இந்த அரசு உருவாக்கி இருக்கிறது என்று தெரிவித்தார். இதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு எழுதி அந்த பொறுப்பை பெற முடியும் எனது உண்மை இதற்கான தேர்வுகள் நடைபெற்றுள்ளது எனவும் விரைவில் முடிவுகள் வெளிவரும் என்று அமைச்சர் கூறினார். இத்தகைய மாற்றத்தை செய்து காட்டியவர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் என்று அவர் குறிப்பிட்டார்.
கர்நாடக மொழியில் தான் இருக்க வேண்டும் என்ற கேள்வி எழுப்பிய நிலையில், நமக்கென்று ஒரு அங்கீகாரம் இருக்க வேண்டும் யாரும் இந்தி படிக்க வேண்டாம் என கட்டாயப்படுத்த வில்லை அவர்களுடைய விருப்பம் நம்முடைய அரசு அதில் தலையிடுவதில்லை பிற மொழிகளில் படிப்பதில் எந்த ஆர்வம் இருக்கிறதோ படித்துக் கொள்ளலாம். தமிழ் மொழி உரிய அங்கீகாரம் பெற வேண்டும் என தெரிவித்தார்.
What's Your Reaction?