பணியிட மாறுதலுக்காக சக காவலரிடம் பணம் பெற்று மோசடி.. 3 காவலர்கள் கைது..!

பணியிட மாறுதல் வாங்கித் தருவதாக கூறி சக காவலரிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டு தாக்கிய வழக்கில் 3 காவலர்களை போலீசார் கைது செய்த நிலையில், தற்போது அந்த காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Feb 6, 2025 - 15:04
 0
பணியிட மாறுதலுக்காக சக காவலரிடம் பணம் பெற்று மோசடி.. 3 காவலர்கள் கைது..!
பணியிட மாறுதலுக்காக சக காவலரிடம் பணம் பெற்று மோசடி.. 3 காவலர்கள் கைது..!

சென்னை கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் காவலர் ரங்கநாதன். இவர் புதுப்பேட்டை ஆயுதப்படை பிரிவில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவருடன் ஆனந்த், சுந்தர்ராஜன், மணிபாபு ஆகியோரும்  பணியாற்றி வருகின்றனர். 

தற்போது காவலர் ரங்கநாதன் அயல் பணியாக கடந்த டிசம்பர் முதல்  திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ரோந்து வாகனம் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் காவலர் ரங்கநாதனிடம்  உங்களுக்கு நல்ல காவல் நிலையத்தில் பணிமாறுதல் வாங்கி தருவதாகவும் அதற்கு பணம் செலவாகும் என சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். இதனை நம்பி ரங்கநாதன் காவலர் சுந்தர்ராஜனிடம் ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்தாக கூறப்படுகிறது.

ஆனால் சுந்தர்ராஜன் கூறியது போல் பணி இடமாறுதல் வாங்கித்தராததால் சந்தேகமடைந்த காவலர் ரங்கநாதன் இது குறித்து அவரிடம் கேட்ட போது மேலும் பணம் கொடுத்தால் தான் பணி இடமாறுதல் கிடைக்கும் என கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ரங்கநாதன் பணத்தை திருப்பி கேட்டதாக தெரிகிறது. 

நேற்று முன்தினம் இரவு காவலர் ரங்கநாதன் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் வைத்து  சுந்தர்ராஜனிடம் பணத்தை கேட்ட போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சுந்தர்ராஜன் உடன் இருந்த அவரது நண்பரும் சக காவலர்களுமான  ஆனந்த், மணிபாபு ஆகியோர் சேர்ந்து ரங்கநாதனை சரமாரி தாக்கியதாக தெரிகிறது. 

இதில் காயமடைந்த ரங்கநாதன் சிகிச்சைக்sகாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டடார். இந்த சம்பவம்  குறித்து பாதிக்கப்பட்ட காவலர் ரங்கநாதன் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி காவலர்கள் சுந்தர்ராஜன், ஆனந்த், மணிபாபு ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக காவலர் சுந்தர்ராஜன், ஆனந்த், மணிபாபு ஆகியோரிடம் அதிகாரிகள் துறை ரீதியான விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ஆயுதப்படை துணை ஆணையர் ராதாகிருஷ்ண் காவலர்கள் மூன்று பேரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow