தொடர் விடுமுறை எதிரொலி.. விமான கட்டணங்கள் கிடுகிடு உயர்வு..!
கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு போன்ற தொடர் விடுமுறையால் சொந்த ஊர்கள் மற்றும் சுற்றுலா தளங்களுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், விமான கட்டணங்கள் பன்மடங்கு அதிகரித்து காணப்படுகிறது.
கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு போன்ற தொடர் விடுமுறையால் சொந்த ஊர்கள் மற்றும் சுற்றுலா தளங்களுக்கு செல்லும் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கொச்சி, மைசூர், சிங்கப்பூர், கோலாலம்பூர், தாய்லாந்து, துபாய் விமான டிக்கெட் கட்டணங்கள் கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் விமாணப்பயணிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் ஆங்கில புத்தாண்டு விழாக்களையொட்டி தொடர் விடுமுறைகள் வருவதால் சென்னையில் வசிக்கும், தென் மாவட்ட மக்கள் உள்ளிட்ட வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள், தங்களுடைய சொந்த ஊர்களுக்கு மற்றும் சுற்றுலா தளங்களுக்கு புறப்பட்டு செல்ல தொடங்கியுள்ளனர்.
பெரும்பாலான ரயில்களில் டிக்கெட்டுகள் முன்பதிவு ஏற்கனவே முடிந்து விட்டது. தனியார் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு அதிகமாக இருக்கிறது. மேலும் ரயில், பேருந்துகளில் பயணம் மேற்கொண்டால் பயண நேரமே ஓரிரு நாட்களை எடுத்துக் கொள்ளும் என்பதால் பெரும்பாலானவர்கள் விமானங்களில் பயணிக்க தொடங்கியுள்ளனர்.
இதை அடுத்து சென்னை விமான நிலையத்தில் விடுமுறை கால பயணிகள் கூட்டம் அதிகரித்து உள்ளது. தென் மாவட்ட மக்கள் செல்லக்கூடிய தூத்துக்குடி, மதுரை மற்றும் திருவனந்தபுரம், கொச்சி விமானங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. சுற்றுலா தளங்களான மைசூர், மற்றும் தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற நாடுகளுக்கும் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளன.
விமான கட்டணங்களின் விவரம்:
புறப்படும் இடம் | சேரும் இடம் | வழக்கமான கட்டணம் | இன்றைய கட்டணம் |
சென்னை | தூத்துக்குடி | ரூ.4,796 | ரூ.14,281 |
சென்னை | மதுரை | ரூ.4,300 | ரூ.17,695 |
சென்னை | திருச்சி | ரூ.2,382 | ரூ.14,387 |
சென்னை | கோவை | ரூ.3,485 | ரூ. 9,418 |
சென்னை | சேலம் | ரூ.3,537 | ரூ. 8,007 |
சென்னை |
திருவனந்தபுரம் |
ரூ.3,821 | ரூ.13,306 |
சென்னை | கொச்சி | ரூ.3,678 | ரூ.18,377 |
சென்னை | மைசூர் | ரூ.3,432 | ரூ. 9,872 |
சென்னை | சிங்கப்பூர் | ரூ.7,510 | ரூ.16,861 |
சென்னை | கோலாலம்பூர் | ரூ.11,016 | ரூ.33,903 |
சென்னை | தாய்லாந்து | ரூ.8,891 | ரூ.17,437 |
சென்னை | துபாய் | ரூ.12,871 | ரூ.26,752 |
இதே போல் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனாலும் கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்து இருந்தாலும், பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் விமான டிக்கெட்டுகள் எடுத்து கொண்டு இருக்கின்றனர். இதனால் பல விமானங்களில் சீட் இல்லாத நிலையே உருவாகி உள்ளது.
இதைப்போல் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனாலும் கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்து இருந்தாலும், பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் விமான டிக்கெட்டுகள் எடுத்து கொண்டு இருக்கின்றனர். இதனால் பல விமானங்களில் சீட் இல்லாமல் ஃபுல் ஆகிவிட்டன.
What's Your Reaction?