"அப்பா-னு " சொன்னதும் அந்த SMILE.. நெகிழ்ந்த முதலமைச்சர்
மாணவிகளுடனான கலந்துரையாடிய வீடியோவை பதிவிட்டு, “அப்பா…” என்றும் “நிறைவான நாள்” என நெகிழ்ச்சியடைந்தார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்.
விருதுநகர் மாவட்டம் சூலக்கரை பகுதியில் உள்ள ஆதரவற்றோர் பெண் குழந்தைகள் நல விடுதியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆய்வு செய்து மாணவிகளிடம் கலந்துரையாடினார்.
அப்போது அங்கிருந்த மாணவி ஒருவர் அப்பாவாக தங்களுக்கு இனிப்புகளை முதலமைச்சர் வாங்கிவந்ததாக உருக்கமாக பேசினார். தொடர்ந்து மாணவியின் பேச்சை கண்டு நெகிழ்ந்த முதலமைச்சர், மாணவிகளுடனான கலந்துரையாடிய வீடியோவை பதிவிட்டு, “அப்பா…” என்றும் “நிறைவான நாள்” என நெகிழ்ச்சியடைந்தார்.
What's Your Reaction?