Chat GPT vs DEEPSEEK R1  இந்தியாவுக்கு ஆபத்து? விழிபிதுங்கும் அமெரிக்கா!

AI, CHAT GPT, இந்த இரண்டுமே டெக்னாலஜி உலகில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டன. இவைகளுக்குப் போட்டியாக வெளியாகியுள்ள DEEPSEEK R1 என்ற ஆப், உலகையே மிரளவிட்டுள்ளது. முக்கியமாக டெக்னாலஜி உலகில் மன்னாதி மன்னனாக வலம் வரும் அமெரிக்காவை விழிபிதுங்க வைத்துள்ள இந்த DEEPSEEK R1, இந்தியாவுக்கும் தலை வலியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது

Jan 30, 2025 - 12:49
Jan 30, 2025 - 12:50
 0
Chat GPT vs DEEPSEEK R1  இந்தியாவுக்கு ஆபத்து? விழிபிதுங்கும் அமெரிக்கா!
Chat GPT vs DEEPSEEK R1 

இணைய உலகம் கடந்த 20 ஆண்டுகளாக மாபெரும் புரட்சிகளை சந்தித்து வருகிறது. படிப்படியாக வளர்ந்து வந்த கணினி தொழில்நுட்பம், தற்போது யாரும் எதிர்பாராத உச்சத்தைத் தொட்டுள்ளது. அமெரிக்க கண்டுபிடிப்புகளான ஏஐ, CHATGPT இந்த இரண்டுமே, குறுகிய காலத்தில் விஸ்வரூபம் எடுத்தன. இந்த ஆச்சரியத்தில் இருந்து மீளும் முன்பே, CHATGPTக்குப் போட்டியாக தரமான சம்பவத்தை செய்துள்ளது சீன நிறுவனம். உலகளவில் அனைத்துத் துறைகளிலும் சீனாவின் ஆதிக்கம் எந்தளவுக்கு உள்ளது என்பதை சொல்லி தெரியவேண்டிய அவசியமில்லை. அசலையும், அசலுக்கு நிகராக போலியையும் கண்டுபிடிப்பதில் சீனாவை விஞ்ச இங்கு யாரும் இல்லை.      

அப்படி CHATGPTக்குப் போட்டியாக சீன நிறுவனம் கண்டுபிடித்த DEEPSEEK R1 என்ற ஆப், ஆப்பிள் AppStore-ல் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. ஜனவரி 20ம் தேதி வெளியான DEEPSEEK R1, குறைவான விலையில் தரமான சேவையை வழங்குவதால் ஒரே வாரத்தில் வேர்ல்ட் ஃபேமஸ் ஆகிவிட்டது. DEEPSEEK R1-ன் விஸ்வரூப வெற்றியை பார்த்து, “புள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்ன்னு நினைச்சா பார்த்தேன்” என மைண்ட் வாய்ஸில் கதறிக்கொண்டு இருக்கிறது அமெரிக்கா. OPEN AI நிறுவனத்தின் CHAT GPT-க்கு நிகராக, DEEPSEEK R1 இதை டெக் யூஸர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

அமெரிக்க AI நிறுவனங்கள் பயன்படுத்தும் சிப்களை விட, மிகவும் குறைவான தரம் கொண்ட சிப்களை கொண்டே DEEPSEEK-ஐ உருவாக்கியுள்ளது சீன நிறுவனம். ஆனாலும் அவுட்புட்-இல் தரமாக ரிசல்ட் காட்ட, ChatGPT-ஐ பயன்படுத்தி வந்த பயனர்களும், இப்போது DEEPSEEK வலையில் வீழ்ந்துவிட்டனர். DEEPSEEK R1 எப்படி CHAT GPT-ஐ மிஞ்சியது என அமெரிக்க தொழில்நுட்ப வல்லுநர்களே ஆச்சர்யத்தில் திகைத்துள்ளனர். DEEPSEEK-ன் இந்த தரமான செய்கை, AI தொழில்நுட்பத்தில் அமெரிக்காவின் ஆதிக்கம் குறைந்து வருகிறதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. 

இதனிடையே DEEPSEEK, இந்தியாவுக்கும் பெரும் ஆபத்தாக உருவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது DEEPSEEK-இடம், பல்வேறு கேள்விகளை கேட்டு அதனை செக் செய்து வரும் பயனர்களில் சிலர், இந்தியாவில் உள்ள அருணாச்சலபிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் குறித்தும் கேள்விகள் கேட்டுள்ளனர். ஆனால், இந்த கேள்விகளுக்கு சரியான பதில் சொல்லாத DEEPSEEK, "மன்னிக்கவும்.. அது தற்போது எனது அறிவு எல்லைக்கு அப்பாற்பட்ட கேள்வி. நாம வேற எதையாவது பேசலாமே” என நக்கலாக கூறுகிறதாம். இது முழுக்க முழுக்க சீனாவின் சதி என சொல்லப்படுகிறது. 

அருணாச்சல பிரதேசம் தனது நாட்டிற்குச் சொந்தமானது என்றும், திபெத்தின் ஒரு பகுதி எனவும் எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் கூறி வருகிறது சீனா. இப்போது அதனை DEEPSEEK ஆப் மூலம் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல சீன நிறுவனம் முயல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. DEEPSEEK ஒரு ஏஐ மாடல் என நினைத்துக்கொண்டிருக்கும் நிலையில், அதன் மூலம் சத்தமே இல்லாமல் வரலாற்று மோசடியை அரங்கேற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறது சீனா. இதற்கு இந்திய அரசு விரைவில் செக் வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow