5 மணி நேரம் பதற்றத்தில் இருந்த போலீஸார்.. முதலமைச்சர் சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா புறப்படுவதற்கு முன், விமான நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் புரளியால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க இன்று இரவு அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார். சுமார் 17 நாட்கள் அமெரிக்காவில் இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், செப்டம்பர் 12ம் தேதி தமிழ்நாடு திரும்புகிறார்.
சென்னை விமான நிலையம் சென்றடைந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்களும், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்திற்கு இமெயில் மூலமாக நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்ட சென்ற விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டு இருந்ததால் விமான நிலையம் பரபரப்பானது.
இதில், முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த வெடிகுண்டு மிரட்டல், முதலமைச்சரின் விமானம் புறப்பட்டுச் சென்ற பிறகுதான் அதிகாரிகள் பார்த்ததாக கூறப்படுகிறது. விமான நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் காவல்துறையினருக்கு பெரும் தலைவலியாக மாறியது.
இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியோடு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அது புரளி என்பது தெரிந்தது. இமெயில் மூலம் அனுப்பும் அந்த நபர் இதுவரை சிக்கவில்லை. நேற்று முதல்வர் முகஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ள நிலையில், அவர் செல்வதற்கு முன் தான் இந்த மிரட்டல் புரளி வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, மிரட்டல் புரளி குறித்து விமான நிலைய அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?






