பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை. எச்சரிக்கை... தேவையான தகவல் அளிக்காவிட்டால் அங்கீகாரம் ரத்து..!
பொறியியல் கல்லூரிகள் தேவையான தகவல்களை அளிக்காவிட்டால் அதன் அங்கீகாரம் எந்த ஒரு அறிவிப்பும் இன்றி, சஸ்பெண்ட் செய்யப்படும் அல்லது திரும்பப் பெறப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், 6-வது அல்லது 7-வது சம்பள கமிஷன் நிர்ணயம் செய்த ஊதியத்தை வழங்க வேண்டும் எனவும் அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
2025-26 ஆம் கல்வியாண்டில் மாணவர்களை சேர்ப்பதற்கான அங்கீகாரத்தை பெற அபராதத்துடன் ஜனவரி 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பக்கட்டணத்துடனும், பிப்ரவரி 7 ஆம் தேதிக்குள் 50 ஆயிரம் அபராதம் செலுத்தியும், தனியார் பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக் கழக பதிவாளர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக் கழகத்தின் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் ஆண்டு தோறும் மாணவா் சோ்க்கைக்கான அங்கீகாரத்தை சம்பந்தப்பட்ட தனியார் கல்லூரிகள் பெற வேண்டும். இதற்கான வழிகாட்டுதலை முறையாகப் பின்பற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படும். கல்லூரிகள் அளிக்கும் விண்ணப்பத்தின் அடிப்படையில் பல்கலைக் கழகத்தினால் நியமிக்கப்படுமு் குழு ஆய்வு செய்து, பல்கலைக்கழகத்தின் இணைப்பு அனுமதியை வழங்கும்.
கல்லூரியில் உள்ள வகுப்பறை, ஆய்வகம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளும், மாணவா்களின் எண்ணிக்கு ஏற்ப ஆசிரியர் நியமன எண்ணிக்கையும் ஆய்வுச் செய்யப்படும். பொறியியல் கல்லூரிகள் அனுமதி பெறுவதற்கு ஜனவரி 31 ஆம் தேதி வரையில் கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்கலாம். எனினும் அபராதத்துடன் பிப்ரவரி 7 ந் தேதி வரையில் ஆம் தேதி முதல் பிப்ரவரி 2 ஆம் தேதி வரையிலும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் விவரங்களை கடைசி தேதிக்குள் சமர்ப்பிக்காத தனியார் கல்லூரிகளுக்கு 2025-26 கல்வியாண்டிற்கான இணைப்பு வழங்குவதற்கு எந்த சூழ்நிலையிலும் பரிசீலிக்கப்படாது தேவையான தகவல்களை அளிக்காத கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் எந்த ஒரு அறிவிப்பும் இன்றி சஸ்பெண்ட் செய்யப்படும் அல்லது திரும்பப் பெறப்படும். அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வந்த பொறியியல் கல்லூரிகளில் போலி பேராசிரியர்கள் பணியாற்றி வருவதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியது. அதனைத் தொடர்ந்து பல்கலைக் கழகத்தின் சார்பில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
பொறியியல் கல்லூரியில் ஆசிரியர்கள் நியமனம் மோசடியாக நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், 295 பொறியியல் கல்லூரிகளில் 700 ஆசிரியர்கள் போலியாக பல கல்லூரிகளில் பெயர்களை பதிவு செய்ததாக கூறப்பட்டது. அதன் மீது ஆட்சிமன்றக்குழுவில் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?