பொங்கலுக்கு ரேஸில் புதிய திரையிடப்பட்ட படங்கள்.. டிவிஆர் ரேட்டிங்கில் சாதனைப்படைத்த அமரன்..!

பொங்கல் பண்டிகையின்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட அமரன் திரைப்படம், டிவிஆர் ரேட்டிங்கில் 8.5 என்ற உயரிய புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளது. திரையரங்கில் வெற்றிபெற்ற அமரன் திரைப்படத்தை, பொங்கல் பண்டிகையன்று பலரது இல்லங்களிலும் ஒளிபரப்பான நிலையில், பலரும் கண்டு மகிழ்ந்துள்ளனர்.

Jan 24, 2025 - 15:57
 0
பொங்கலுக்கு ரேஸில் புதிய திரையிடப்பட்ட படங்கள்.. டிவிஆர் ரேட்டிங்கில் சாதனைப்படைத்த அமரன்..!
டிவிஆர் ரேட்டிங்கில் சாதனைப்படைத்த அமரன்..!

தமிழகத்தின் பிரபல பொழுதுபோக்கு தொலைக்காட்சியான விஜய் டிவியில், தமிழர் பண்டிகையான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திரைக்கு வந்து சில மாதங்களே ஆன, பிளாக்பஸ்டர்  திரைப்படங்களை காட்சிப்படுத்தியது. அந்த திரைப்படங்களுக்கான ரேட்டிங்கில் விஜய் தொலைக்காட்சி முன்னணி இடத்தைப் பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து, விஜய் டிவி மீண்டும் பண்டிகை பொழுதுபோக்கிற்கான அளவுகோலை அமைத்துள்ளது. 

மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களைக் கவர்ந்த மறக்க முடியாத பொங்கல் திரைப்படங்களின் தொகுப்பை வழங்கியது.  அதன் சிக்னேச்சர் ரியாலிட்டி ஷோக்கள், மெகா-சீரியல்கள் மற்றும் கேம் ஷோக்களுடன் திரைப்படங்களை நேயர்களுக்கு வழங்கி சாதனை படைத்துள்ளது. 

பொங்கல் திரைப்படக் கொண்டாட்டம் அமரன் திரைப்படம் சிறப்பான பலன்களை வழங்கியது. சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடித்த அதிரடி  திரைப்படம் 8.5 -TVR உடன் 2 கோடி பார்வையாளர்களை சென்றடைந்தது மற்றும் 1.2 பில்லியன் நிமிட பார்வை நேரத்தை உருவாக்கியது. ரானுவ வீரர் சம்பந்தப்பட்ட கதை என்பதால், அமரன் திரைப்படம் திரையங்கில் வெளியான ஒட்டுமொத்த தமிழ்சினிமா பிரபலங்கள் உட்பட உலக சினிமா தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.

இந்த வரிசையில் இணைந்து, கார்த்தி மற்றும் அரவிந்த் சுவாமி நடித்த மெய்யழகன் திரைப்படம்  தமிழ்நாடு முழுவதும் பார்வையாளர்களை கவர்ந்தது, 7.4 TVR-ஐப் பெற்றது, பார்வையாளர்களின் ஆதரவை மீண்டும் நிரூபித்தது. 

கிராமத்து கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவான இந்த கதைக்களத்தில், கார்த்திக், அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா, தேவதர்ஷினி, ஜெய்பிரகாத் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியான போது, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றாலும், படத்தில் நீளம் அதிகமாக இருப்பதாக விமர்சனம் எழுந்தது. அதனால், படத்தின் நீளம் குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. திரைப்படம் தொலைக்காட்சியில் வெளியான போது, அதே அளவிற்கு ரசிகர்கள் வரவேற்பு அளித்துள்ளனர். 

இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கத்தில், வாழை திரைப்படம் அனைவராலும்  கொண்டாடப்பட்டது. இயக்குநர் மாரி செல்வராஜின் நிஜ வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக்  கொண்டு,  இதயத்தைத் தொடும் ஒரு அற்புதமான படைப்பாக உருவாக்கப்பட்ட இப்படம், உலகம் முழுவதும் உள்ள விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களின் வெகுவாக கவர்ந்தது.

இந்த பொங்கல் சிறப்பு திரைப்படங்கள் வரிசையில் விஜய் டிவி அமரன், மெய்யழகன், வாழை மற்றும் அரண்மனை 4 ஆகிய உலகத் தொலைக்காட்சி பிரீமியர்களும் இடம்பெற்றன. ஒவ்வொரு படமும் பார்வையாளர்களால் ரசிக்கப்பட்டு,  பொழுதுபோக்குகளை வழங்கும் சேனலின் பாரம்பரியத்திற்கு மேலும் வலு சேர்த்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow