5 - 8ம் வகுப்புகளுக்கு இனி ALL PASS கிடையாது என மத்திய அரசு அதிரடி அறிவிப்பு.. இடைநிற்றலை அதிகரிக்கும் என கல்வியாளர்கள் கருத்து..!
5 மற்றும் 8ஆம் வகுப்பில் கட்டாய தேர்ச்சி முறையை மத்திய அரசு ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது கட்டாய தேர்ச்சி என்ற நடைமுறை உள்ள நிலையில், மாற்றப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
5 மற்றும் 8ஆம் வகுப்பில் கட்டாய தேர்ச்சி முறையை மத்திய அரசு ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது 8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்ற நடைமுறை உள்ள நிலையில், மத்திய அரசு அதனை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டில் மத்திய அரசு பள்ளிகள், மாநில அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதில் மாநில அரசுகள் பள்ளியில் நடக்கும் தேர்வுகளுக்கு பல்வேறு கொள்கைகளை கடைபிடித்து வருகிறது. அதே நேரத்தில் மத்திய அரசு பள்ளிகள் வேறு கொள்கைப்படி செயல்பட்டு வருகிறது. இதனால், மாநில மற்றும் மத்திய அரசு பள்ளிகளின் தேர்வு முறைகள் அனைத்து வேறுப்படும்.
5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு ஆல் பாஸ் கிடையாது என்று மத்திய அரசின் அறிவிப்பு தவறானது என்றும் இடைநிற்றலை அதிகரிக்கும் என கல்வியாளர்களும் ஆசிரியர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஆண்டு இறுதித் தேர்வில் தோல்வி அடைந்தாலும் ஆல் பாஸ் வழங்கப்படுகிறது
மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்கவும் தொடர்ந்து மாணவர்கள் கல்வி பயின்றிடவும் ஐந்து முதல் எட்டாம் வகுப்பு பயிலும் அனைவருக்கும் ஆஸ்பாஸ் என்கின்ற முறை கடைப்பிடிக்கப்படுகின்றது
இந்த நிலையில் அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 5 முதல் எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் என்கின்ற நடைமுறை ரத்து செய்யப்படுவதாக மத்திய கல்வி அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி ஐந்து முதல் எட்டாம் வகுப்பு மாணவர்கள் ஆண்டு இறுதித் தேர்வில் தோல்வியடைந்தால் அவர்கள் அதே வகுப்பை எழுதி தேர்ச்சி பெற வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அந்த சிறப்பு தேர்வில் தேர்ச்சி பெற தவறினால் மீண்டும் அவர்கள் அதே வகுப்பில் பயில வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆசிரியர்களும் கல்வியாளர்களும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த நடைமுறையால் மாணவர்களின் இடை நிற்றல் அதிகரிக்கும் என்றும் இதனால் மாணவர்கள் கல்வி பயிலாமல் பிற வேலைகளுக்கு செல்லும் நிலை ஏற்படும் என்றும் தெரிவிக்கின்றனர் எனவே மத்திய அரசு தற்போது கொண்டு வந்துள்ள இந்த முறையை கைவிட்டு மீண்டும் பழைய நடைமுறையே தொடர அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்
What's Your Reaction?