சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியது தவறா? – எச்.ராஜா சொன்ன பதில்!

சிதம்பரம் கோவில் வளாகத்தில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதில் எந்த தவறும் இல்லை என பாஜக மூத்த நிர்வாகி எச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

Oct 10, 2024 - 02:51
 0
சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியது தவறா? – எச்.ராஜா சொன்ன பதில்!

திருவாரூரில் பாஜக உறுப்பினர் சேர்க்கை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக பாஜக ஒருங்கிணைப்புக்குழு தலைவர் எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அரியானாவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக செயல்படவில்லை என கூறும் காங்கிரஸ், ஜம்மு காஷ்மீரில் ஏன் கூறவில்லை?” என கேள்வி எழுப்பினார்.

மேலும், சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தில் தமிழக அரசு கையெழுத்திட்டால் அடுத்த கணமே கொடுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு கொடுக்கும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ”சிதம்பரம் கோவில் கருவறையில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடவில்லை. கோவில் வளாகத்தில் தான் விளையாடி உள்ளனர்.அதில் ஒன்றும் தவறில்லை” என்றார்.

தொடர்ந்து பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டுக்கொண்டிருக்க,  ”நீங்க என்ன பத்திரிகை ”என கோபம் அடைந்தார் எச்.ராஜா. 

மேலும், கூட்டணியில் மாற்றம் வரும் என திண்டுக்கல் சீனிவாசன் பேசிய குறித்து கேட்டதற்கு, ”திண்டுக்கல் சீனிவாசன் என்னுடைய நண்பர். அதிமுக சீனியர் தலைவர்கள் எல்லாம் கூட்டணி குறித்து பேசி வருகிறார்கள் என தகவல்கள் வருகிறது. அதனுடைய தொடர்ச்சியாக திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருக்கலாம்” என எச்.ராஜா தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow