கார் ரேஸில் 3ஆவது இடம்.. துபாயில் குழுவினருடன் மாஸ் காட்டிய அஜித்..!
கார் விபத்திலிருந்து மீண்டு வந்து துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் 3ஆவது இடம் பிடித்து சாதனை படைத்த அஜித் குமார் மற்றும் அவரது குழுவினருக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் அஜித்குமார் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து, கார் ரேஸ், பைக் ரேஸ், கல்லூரி மாணவர்களுக்கு ட்ரோன் பயிற்சி தருவது என பல்வேறு வேலைகளை செய்து வருகிறார். அந்த வகையில், கார் ரேசில் அதீத ஆர்வம் கொண்ட நடிகர் அஜித்குமார், சுமார் 15 ஆண்டுகள் கழித்து ரேசிங் துறையை மீண்டும் டாப் கியர் போட்டு தொடங்கினார். உலகளவிலான போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக ஆஜித்குமார் ரேசிங் என தன் பெயரில் ஒரு அணியை அறிமுகப்படுத்தினார். இதனைக் கண்ட ரசிகர்கள் அவர் கார் ரேஸ் செய்யும் போட்டிகளை காண வேண்டும் என்ற ஆவலோடு காத்திருந்தனர்.
துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் இந்தியா சார்பில் அஜித் குமாரும், அவரது அணியும் பங்கேற்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதற்காக தீவிரமாக அஜித்குமார் மற்றும் அவரது அணியினை சேர்ந்தவர்கள் பயிற்சிகளை மேற்கொண்டனர். அப்போது, அஜித் யாரும் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கினார். பெரிய காயங்கள் எதுவும் இல்லாமல் அஜித்குமார் விபத்தில் இருந்து உயிர் தப்பினர். ஆனால் அந்த வீடியோ இணையத்தில் வெளியான போது, ரசிகர்கள் அஜித்தின் உடல்நிலை குறித்து கவலை தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து அஜித் இந்த ரேசில் பங்கேற்க மாட்டார் என்ற அறிவிப்பு வெளியானது. ஆனால், அஜித் ரேசில் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமடைத்தை கொடுத்தது. இதனையடுத்து இந்த துபாய் 24H சீரிஸ் endurance ரேஸில் பங்கேற்கும் முன், “என்னுடைய ரசிகர்கள் மீது எனக்கு அளவுக்கடந்த அன்பு இருக்கிறது” என அஜித்குமார் சொல்லும் வீடியோவும், “ரசிகர்கள் ஒருவருக்குள் ஒருவர் சண்டைப்போட வேண்டாம்” என அவரே பேசும் வீடியோவும் வெளியானது. இந்த வீடியோ ரசிகர்களை ஆறுதல் படுத்தியது.
இதனையடுத்து ஜனவரி 11ம் தேதி அஜித்குமார் ரேஸிங் அகாடமிக்கு மிக முக்கியமாக கருதப்பட்ட 24H சீரிஸ் endurance ரேஸ் நேற்று தொடங்கியது. இந்த போட்டியை காண்பதற்காக அஜித் குமார் வந்த போதே ‘ஆலுமா டோலுமா’ பாடல் ஒலிக்கப்பட்டது. மேலும் அங்கிருந்தவர்கள் அவரை பார்த்து உற்சாகத்தில் கோஷங்களை எழுப்பினர். இதன் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியான நிலையில், இதைகண்ட வர்ணனையாளர், Valentino Rossiக்கு வரும் சத்தத்தை விட அஜித்குமாருக்கு அதிக சத்தம் வருகிறது என்று கூறினார். இப்படி அவர் கூறியதை கேட்கும் போது, AKவின் புகழ் எல்லைதாண்டி ஒலிப்பதை அறியமுடிகிறது.
இந்நிலையில், ஜனவரி 11ம் தேதி மதியம் 1.30 மணிக்கு தொடங்கி 24 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்ற இந்த 24H சீரில் ரேசில், அஜித் அணியினர் இயக்கிய காரின் பிரேக் பாதியில் செயலிழந்து நின்றது. இதனால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், வெற்றி பெற்று விடுவோமா..? கோப்பையை அடித்துவிடுவோமா என்ற சந்தேகத்தில் இருந்தனர். ஆனால், தடைகள் அனைத்தையும் தகர்த்தெறிந்து, இந்த ரேசை வெற்றிகரமாக முடித்து, அஜித்குமார் ரேசிங் அணியினர் 3வது இடத்தை தட்டித் தூக்கியுள்ளனர்.
தனது அணியினரின் இந்த வெற்றியை பார்த்து கையில் தேசியக் கொடியுடன் வந்து தனது மகிழ்ச்சியை அஜித்குமார் வெளிப்படுத்தினார். இதுவரையிலும் ரசிகர்கள் பார்க்காத ஒரு அஜித்தை இன்று காணமுடிந்ததாக ரசிகர்கள் அஜித்க்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், அஜித்குமாரின் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அஜித்குமாரின் படத்தின் FDFSல் கிடைக்கும் மகிழ்ச்சியை விட, இந்த கார் ரேசில் வெற்றிபெற்றதால் கிடைத்த மகிழ்ச்சி பெரிதாக இருக்கிறது என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
What's Your Reaction?