தை அமாவாசையில் விஜய் எடுத்துள்ள முடிவுகள் தவெகவிற்கு பலன்களை அள்ளித்தருமா? விஜய்யின் அடுத்த ப்ளான் இதுதான்..!
கட்சி தொடங்கியதில் இருந்தே கிரக பலன்களை பார்த்துதான் ஒவ்வொரு மூவ்களையும் தவெக தலைவர் விஜய் எடுத்து வைத்து வருகிறார் என்று கூறப்படும் நிலையில், தை அமாவாசையை முன்னிட்டு ஆதவ் அர்ஜூனாவை கட்சிக்குள் இணைக்கும் முடிவை விஜய் எடுத்துள்ளதாகக் பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் விஜய் அரசியலுக்குள் நுழைவதாக அறிவிப்பு வெளியான பிப்ரவரி 2, 2024 முதல் தற்போது மா.செக்கள் நியமனம் வரை ஒவ்வொன்றையும் தன் ராசியின் கிரக பலன்களை பார்த்துதான் செய்து வருகிறார் என்பது ஜோதிடர்களின் கருத்தாக இருப்பதோடு, விஜய் ஒரு ஆன்மிக அரசியல்வாதி என்று அரசியல் விமர்சகர்கள் சிலரும் கூறி வருகின்றனர். ஆன்மிக அரசியல்வாதி என்று அரசியல் விமர்சகர்கள் சிலரும் கூறி வருகின்றனர்.
குறிப்பாக, கட்சிக் கொடி அறிமுக விழா கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென இரண்டு நாட்களுக்கு முன் அதாவது ஆகஸ்ட் 20 ஆம் தேதி பனையூரில் உள்ள இல்லத்தில் மஞ்சள் நிறக் கொடியை விஜய் ஏற்றி வைத்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. இது கொடி அறிமுக விழாவிற்கான ஒத்திகை என்று சொல்லப்பட்டாலும், 22 ஆம் தேதி நாளைவிட பௌர்ணமி நாளில் விஜய்யின் ராசிக்கு யோகம் உண்டாகும் என்று கூறப்பட்டதாகவும், அதனால் தான் பௌர்ணமி நாளான ஆகஸ்ட் 20 ஆம் தேதியில் நல்ல நேரம் பார்க்கப்பட்டும், புஸ்ஸி ஆனந்த் கொடிக்கு பூஜை போட்டும், அதனை விஜய் ஏற்றி வைத்தார் என்றும் கூறப்பட்டது.
அதேபோல் கொடியின் நிறத்தில் மங்களம் பொங்க வேண்டும் என்பதற்காக மஞ்சள், சிவப்பு ஆகிய நிறங்களை தவெக கொடியின் நிறங்களாக செலக்ட் செய்ததாகவும் கூறப்பட்டன. கொடி அறிமுக நாளான 22.8.2024 தேதியும் நியூமராலஜி படியே குறிக்கப்பட்டது என்றனர். நியூமராலஜிபடி விஜய்க்கு 4 என்ற எண் கைக் கொடுக்கும் என்பதால் 22 ஆம் தேதி முடிவு செய்யப்பட்டதாம். அதுமட்டுமல்லாம், கொடி அறிமுக விழாவிற்கு வந்த விஜய்யின் கார் எண் TN37 DR 1111 ஆக இருந்தது. இதில் 1111 என்ற எண்ணின் கூட்டுத் தொகையும் 4 என்பதால் அந்த காரில் பயணித்ததாகக் கூறப்பட்டது. இப்படி ஜோதிடம், நியூமராலஜி உள்ளிட்டவற்றை கட்சியின் முதல் மாநாட்டிற்கும் விஜய் பார்த்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், ஒவ்வொன்றையும் தன் ராசி பலன்களை வைத்து காய்களை நகர்த்தி வரும் விஜய், தவெகவின் பலத்தை அதிகரிக்க தை அமாவாசையில் மிக முக்கிய முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது, தன் அரசியல் வியூக வகுப்பாளரை மாற்றும் முடிவை விஜய் எடுத்துள்ளதாகக் பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தவெக இரண்டு சதவிகித வாக்குகளைக் கூட பெறாது என்று தேர்தல் வியூக வகுப்பாளரான ஜான் ஆரோக்கியசாமி பேசியதாக ஒரு ஆடியோ வெளியாகி பனையூரையே பரபரப்பாக்கியது. இதனால் விஜய் அப்செட்டில் உள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், முதற்கட்டமாக மா.செக்களை சந்தித்த விஜய்யிடம் ஜான் ஆரோக்கியசாமி குறித்து சில குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆடியோ லீக், மாசெக்கள் குற்றச்சாட்டு என அடுத்தடுத்து ஜான் ஆரோக்கியசாமி மீது தொடர் புகார்கள் எழுந்ததால், அவரை மாற்றி வேறொரு நம்பகத்தன்மை வாய்ந்த நபரை களமிறக்க விஜய் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
விஜய்யின் அந்த லிஸ்டில் முதல் இடத்தை பிடித்துள்ளது விசிகவின் எக்ஸ் துணைப் பொதுச் செயலாளரும், வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனத்தின் நிறுவனருமான ஆதவ் அர்ஜூனா என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.
தவெக மாநாட்டில் விஜய் அறிவித்த “ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு” என்பதை முதல் ஆளாக வரவேற்றது, திருமாவளவன் கலந்துக் கொள்ளாத போதும் விஜய் பங்கேற்ற விழாவில் கலந்துக் கொண்டு, விஜய்யின் பேச்சை வரவேற்றது என விஜய்யின் அரசியல் மூவ்களில் ஆதவ் அர்ஜுனா இம்பிரஸ் ஆகி இருந்தார் என்றே சொல்லப்பட்டது. இதனால், விசிகவில் இருந்து விலகிய அவர் தவெகவில் தான் இணைவார் என்று பரபரப்பாக பேசப்பட, இதுகுறித்து அவரிடமே கேள்வியாக முன்வைக்கப்பட்டது. அதற்கு மறுப்பு ஏதும் தெரிவிக்காத ஆதவ் அர்ஜூனா, தன் அடுத்த அரசியல் மூவ்களை சமார்த்தியமாக நகர்த்தத் தொடங்கினார். அவரிடம் அதற்காக இருந்தது இரண்டு ஆப்ஷன்கள். ஒன்று தவெக, மற்றொன்று அதிமுக. இரண்டில் மக்கள் மத்தியில் தற்போது பரபரப்பாக இயங்கிக் கொண்டே இருப்பது எதுவென்றால் அது தவெக என்பதால், தவெகவில் இணைய ஆதவ் ஆர்வமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
இத்தகைய சூழலில்தான், ஜான் ஆரோக்கியசாமிமீது கடும் அதிருப்தியில் இருந்த விஜய், ஆதவை அழைத்து பேசியதாக பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரண்டாம் கட்ட மா.செக்கள் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், ஆதவ்வை தவெகவில் இணைப்பதை கிட்டத்தட்ட 99 சதவிகிதம் விஜய் உறுதி செய்துவிட்டதாகக் தகவல் வெளியாகியுள்ளது. தை அமாவாசையை முன்னிட்டு விஜய் எடுத்துள்ள இந்த முடிவு, தவெகவின் அரசியல் போக்கையே மாற்றும் வல்லமை கொண்டது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
எனவே, ஆதவ்வின் வருகை, விஜய்யின் அபார எழுச்சிக்கும், வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் மூலமாக வியூகங்களை வகுத்து தவெகவின் வளர்ச்சிக்கும் வழிவகுக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.குப்பில் பார்ப்போம்.
What's Your Reaction?