Deputy CM Row : துணை முதல்வர் பதவி உதயநிதிக்கு ஏற்றம்.. துரைமுருகனுக்கு ஏமாற்றம்.. தமிழிசை சொன்ன பஞ்ச்

Tamilisai Soundararajan on Udhayanidhi Stalin as Deputy CM Row : பேசுவதெல்லாம் சமூக நீதி. ஆனால் கொடுப்பது உதயநிதி என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். துணை முதல்வர் பதவி உதயநிதிக்கு அறிவிக்கப்பட்டால் துரைமுருகனுக்கு ஏமாற்றமாகவும், உதயநிதிக்கு ஏற்றமாகவும் இருக்கும். சமூக நீதியை பற்றி பேசும் முதலமைச்சர், துணை முதலமைச்சராக திருமாவளவன் போன்றவர்களை பற்றி ஏன் சிந்திக்க கூடாது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Sep 24, 2024 - 12:41
Sep 24, 2024 - 14:50
 0
Deputy CM Row : துணை முதல்வர் பதவி உதயநிதிக்கு ஏற்றம்.. துரைமுருகனுக்கு ஏமாற்றம்.. தமிழிசை சொன்ன பஞ்ச்
Tamilisai Soundararajan on Udhayanidhi Stalin as Deputy CM Row

Tamilisai Soundararajan on Udhayanidhi Stalin as Deputy CM Row :உதயநிதிக்கு முடி சூடுவதற்கு அடித்தளம் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். வாரிசு அரசியல் என்பது பல மூத்தவர்கள் , அனுபவசாலிகள் இருக்கும் போது இவர்களைப் போன்றவர்கள் வந்தால் அது அரசாங்கத்திற்கும் நல்லதல்ல ஆட்சிக்கும் ஜனநாயகத்திற்கும் நல்லதல்ல என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

பா. சிவந்தி ஆதித்தனாரின் 89 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.அந்த வகையில் சிவந்தி ஆதித்தனார் உருவ படத்துக்கு முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மரியாதை செலுத்தினார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன்,சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழாவுக்கு அஞ்சலி செலுத்தினோம். அவர் செய்த சேவையை பகிர்ந்து கொள்வது வழக்கம்.பாரா ஒலிம்பிக், ஒலிம்பிக்கில் நமது வீரர்கள் பல சாதனைகளை செய்துள்ளனர் அதற்கு அடித்தளம் இட்டவர் ஆதித்தனார்.எனது வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டவர். எனது உயர்வில் அக்கறை கொண்டவர்..

தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும்.‌ஏமாற்றம் இருக்காது என்று முதலமைச்சர் சொன்னது குறித்து பேசியவர், பழுத்து கொண்டு இருக்கிறது என்று அர்த்தம். அழுத்தம் பழுத்துக் கொண்டு வருகிறது. யாருக்கு ஏமாற்றமாக இருக்காது? யாருக்கு ஏற்றமாக இருக்கும். துரைமுருகனுக்கு ஏமாற்றமாகவும், உதயநிதிக்கு ஏற்றமாகவும் இருக்கும். 

யாரெல்லாம் ஏமாற்றம் அடைய போகிறார்கள், யாரெல்லாம் ஏற்றமாக போகிறார்கள்  என்று தெரியவில்லை. நிச்சயமாக எல்லோருக்கும் ஏற்றமாக இருக்கப் போவதில்லை. பல பேருக்கு ஏமாற்றத்தை தரப்போகிறது. இது முதலில் இருந்தே ஏற்கனவே பரவலாக பேசப்பட்டு உதயநிதிக்கு முடி சூடுவதற்கு அடித்தளம் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

வாரிசு அரசியல் என்பது பல மூத்தவர்கள் , அனுபவசாலிகள் இருக்கும் போது இவர்களைப் போன்றவர்கள் வந்தால் அது அரசாங்கத்திற்கும் நல்லதல்ல, ஆட்சிக்கும் ஜனநாயகத்திற்கும் நல்லதல்ல என்பதை அழுத்தமாக பதிவு செய்வோம். 

திமுக ஆட்சி சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறதா என்று தெரியவில்லை. கவுன்டர் செய்கிறார்களா என்கவுன்டர்கள் செய்கிறார்களா என்று சந்தேகமாக இருக்கிறது. அரசியல் கவுன்டர் பண்ண வேண்டிய நேரத்தில் என்கவுன்டர்கள் நடக்கிறது.  திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 17 என்கவுன்டர் நடந்திருக்கிறது. இது விசாரிக்கப்பட வேண்டும். குற்றம் வெளிக் கொணரப்பட வேண்டும். 

 குற்றவாளிகளை யாரையோ காப்பாற்ற இதெல்லாம் நடக்கிறதோ என்ற அச்சமும் இருக்கிறது. சட்டம் ஒழுங்கு சரியில்லை கஞ்சா பழக்கம் தலை விரித்து ஆடுகிறது. பாலியல் குற்றங்கள் தமிழகத்தில் அதிகமாக இருக்கிறது. அவர்கள் கூட்டணி கட்சியே அவர்கள் மீது அதிருப்தியை கொண்டிருக்கிறார்கள். அது விசிக, காங்கிரஸ், கம்யூ ஆக இருக்கட்டும். திமுக கூட்டணி இப்போது வெளவெளத்து போயிருக்கிறது. அதனால் அவர்கள் ஆட்சியில் சரியாக கவனம் செலுத்தவில்லையோ என்ற எண்ணம் தோன்றுகிறது. 

உதயநிதி துணை முதலமைச்சராக வர வேண்டும் என்று எழுந்துள்ள கோரிக்கை குறித்து பேசிய தமிழிசை சவுந்தரராஜன், சமூக நீதியை பற்றி பேசும் முதலமைச்சர், துணை முதலமைச்சராக திருமாவளவன் போன்றவர்களை பற்றி ஏன் சிந்திக்க கூடாது என்று 3 மாதத்திற்கு முன்பே நான் பேசியிருந்தேன். பேசுவதெல்லாம் சமூக நீதி. ஆனால் கொடுப்பது உதயநிதி என்று சிரித்து கொண்டே கூறினார் தமிழிசை சௌந்தரராஜன். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow