கடத்தி செல்லப்பட்ட மாணவியை கண்டுபிடித்துத் தரக்கோரி உறவினர்கள் சாலைமறியல்

ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரம், மதுரைவீரன் கோவில் பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன் மகள், ஏ.கே.சமுத்திரம் பகுதியில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.எஸ்சி., 3ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று மாலை, பஸ்சில் வந்த மாணவி பஸ் ஸ்டாப்பில் இறங்கி, தன் தோழியுடன் வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார்.

Feb 1, 2025 - 10:38
 0

அப்போது, அந்த வழியாக, 'மாருதி ஈகோ' காரில் வந்த மர்ம நபர்கள், விஜய்ஸ்ரீயை காரில் கடத்திச்சென்றனர்.இதுகுறித்து தகவலை, விஜய்ஸ்ரீயின் தோழி, உறவினர்களுக்கு தெரித்துள்ளார். இதையடுத்து, பேளுக்குறிச்சி போலீசில் தகவல் தெரிவித்தனர். போலீசர் மாணவியின் தோழியிடம் விசாரணை நடத்தினர்.

மாணவியை விரைவாக மீட்டு தரக்கோரி உறவினர்கள், நாமக்கல் - ராசிபுரம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நேற்று இரவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow