Rahul Tikki மறைவு.. Instagram பிரபலத்தின் பதிவால் கொந்தளித்த மக்கள்..!

கோயம்புத்தூர் மாப்பிள்ளை என்கிற இன்ஸ்டாகிராம் பிரபலம் சமீபத்தில் விபத்தில் இறந்த Rahul Tikki என்கிற யூடியூப் influencer இறப்புக்கு All is well Coimbatore Will remember என்று மனசாட்சி இல்லாமல் பதிவிட்டுள்ளது சக youtuber-களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Jan 19, 2025 - 18:10
 0
Rahul Tikki  மறைவு.. Instagram பிரபலத்தின் பதிவால் கொந்தளித்த மக்கள்..!
Rahul Tikki மறைவு.. Instagram பிரபலத்தின் பதிவால் கொந்தளித்த மக்கள்..!

கோயம்புத்தூர் மாப்பிள்ளை என்கிற இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் Influencer என்கின்ற பெயரில்  சமூகவலைதளத்தில் வலைதளத்தில் வலம் வருகிறார். இவர் சமீபத்தில் விபத்தில் இறந்த  Rahul Tikki என்கிற யூடியூப் influencer இறப்புக்கு All is well Coimbatore Will remember என்று மனசாட்சி இல்லாமல் பதிவிட்டுள்ளது சக youtuber-களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கோவையில் அண்மை காலமாக பொது மக்களுக்கு தொந்தரவையும்,  இடையூறுகளையும் ஏற்படுத்தும் விதமாக பல்வேறு வீடியோகளை கோயம்புத்தூர் மாப்பிள்ளை என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வந்தார். அதற்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ச்சியாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இதுகுறித்தும் கோவை மாநகர் காவல் துறையினரும் அந்த நபர் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பிரபல யூட்யூபர் ராகுல் என்பவர் சாலை விபத்தில் மரணம் அடைந்து உள்ளார்.

அதற்கு பல்வேறு இணையதள வாசிகள் மற்றும் யூடியூப்பர்கள் அவர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கோயம்புத்தூர் மாப்பிள்ளை என்ற Influencer அவர் இறப்பிற்கு இரங்கல் தெரிவிக்காமல் All is well Coimbatore Will remember என்று மனசாட்சி இல்லாமல் பதிவிட்டு உள்ளது சக youtuber-களிடம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

மேலும் ராகுலுக்கு இரங்கல் தெரிவிக்கவில்லை என்றாலும் கூட பரவாயில்லை இதுபோல சமூக வலைதளங்களில் அநாகரிக்கமாக இதுபோல் பதிவிட்டதற்கு பெரும்பாலமான சமூக வலைதள வாசிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த பதிவுக்கு சமூக வலைதளங்களில் கடுமையாக இவரை விமர்சித்து வருகிறார்கள். 'Coimbatore மாப்பிள்ளை' தொடர்ந்து கோயம்புத்துரின் நற்பெயரை கெடுக்கும் விதமாக பதிவிட்டு முகம் சுழிக்கும் அளவிற்கு நடந்து வருகிறார்.

தங்களுக்கு பெயரும் புகழும் கிடைக்க வேண்டும் என்பதற்காக சமூகவலைதளத்தில் மற்றவர்களை பேசுவது தற்போதைய காலகட்டத்தில் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் இதுபோன்றவர்களை கொண்டாடுவதை கைவிட வேண்டும் எனவும், சமூக வலைதளங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow