Temporary Teachers Protest : என்னாச்சு..! என்னச்சு..!! உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆசிரியர்கள்
Temporary Teachers Protest in Chennai : சென்னை எழும்பூரில் பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Temporary Teachers Protest in Chennai : திமுக அளித்த தேர்தல் வாக்குறுதி எண் 181-ன்படி பணிநிரந்தரத்தை நிறைவேற்ற வலியுறுத்தி அவர்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு பள்ளிகளில் உடற்கல்வி, கணினி, தையல், இசை, ஓவியம் உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் 12 ஆயிரத்து 500 தொகுப்பூதியத்தில் பணியாற்றும் அவர்கள், தொடர்ந்து 10 ஆண்டுகளாக பணிநிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு, அரசுக்கு எதிராக தங்களது முழக்கங்களை எழுப்பினர். மாதம் மாதம் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்தி வருவதாகவும், ஆனால் இதுவரை அரசிடமிருந்து தங்களுக்கு எந்தவித சதகமான பதிலும் வரவில்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
What's Your Reaction?