Seizing Raja : ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பா? என்கவுன்டர் ஏன்? காவல்துறை அதிகாரி பரபர விளக்கம்

Rowdy Seizing Raja Encounter in Chennai : சீசிங் ராஜாவை என்கவுன்டர் செய்தது ஏன் என்று காவல் தெற்கு இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

Sep 23, 2024 - 12:38
Sep 23, 2024 - 14:12
 0
Seizing Raja : ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பா? என்கவுன்டர் ஏன்? காவல்துறை அதிகாரி பரபர விளக்கம்
joint commissioner sibi chakraborty explain seizing raja police encounter

Rowdy Seizing Raja Encounter in Chennai : சென்னையில் இன்று அதிகாலை ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டர் செய்யப்படார். இது குறித்து காவல் தெற்கு இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி தற்போது விளக்கம் அளித்தார். அப்போது ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் சம்பந்தம் இருப்பதாக எங்களது விசாரணையில் தெரியவரவில்லை என்று தெரிவித்தார்.சென்னை பட்டினப்பாக்கத்தில் கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் நெருங்கிய கூட்டாளியான சீசிங் ராஜா ஆற்காடு சுரேஷ் வழக்கு பழிக்கு பழி தீர்ப்பேன் என்று சபதம் செய்திருந்தாராம். இந்த வகையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலும் போலீஸார் சீசிங் ராஜாவை தேடிவந்தனர்.

வேளச்சேரி வழக்கில் தேடப்பட்டு வந்தார் சீசிங் ராஜா. ஆந்திரா கடப்பா பகுதியில் கைது செய்யப்பட்டார்.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக செம்பியம் போலீஸார் துப்பு துலக்கினர். மறைந்த பிரபல ரவுடியான ஆற்காடு சுரேஷின் தம்பி ராணிப்பேட்டை மாவட்டம் பொன்னை பகுதியைச் சேர்ந்த பொன்னை பாலு 39, அவரது கூட்டாளிகள் திருவேங்கடம்,33 உட்பட 8 பேர் கைதாகினர்.

இதுஒருபுறம் இருக்க கொலையின் பின்னணியில் இருந்ததாக, வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன் என திமுக, அதிமுக, பாஜக, தமாக கட்சிகளை சேர்ந்தவர்கள், ரவுடிகள், வழக்கறிஞர்கள் என பல்வேறு தரப்பைச் சேர்ந்த மொத்தம் 27 பேர் அடுத்தடுத்து கைதாகினர்.இவர்களில் ரவுடி நாகேந்திரன் கடந்த ஜூலை 14ல் போலீஸாரின் என்கவுன்ட்டரில் தீர்த்துக் கட்டப்பட்ட திருவேங்கடம் தவிர மீதம் உள்ள 25 பேரும் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டனர். 28வது நபராக புதூரைச் சேர்ந்த அப்பு என்பவர் கைதானார்.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மட்டும் அல்லாமல், தாம்பரம் மாநகரம் சேலையூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற குற்ற வழக்கு தொடர்பாகவும் பிரபல ரவுடியான கிழக்கு தாம்பரம் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ராஜா என்ற சீசிங் ராஜா,52 தேடப்பட்டு வந்தார்.தாம்பரம் காவல் ஆணையர், பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி என சீசிங் ராஜாவின் புகைப்படத்துடன் நோட்டீஸ் ஓட்டி தேடி வந்தார். இந்நிலையில், ஆந்திராவில் பதுங்கி இருந்த சீசிங் ராஜாவை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். மேலும் வேளச்சேரி பகுதியில் துப்பாக்கியால் மிரட்டி கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்திலும் சீசிங் ராஜா சிக்கி இருந்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த இன்று (23.09.24) அதிகாலையில் நீலாங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அக்கரை இஷ்கான் டெம்பிள் பின்புறம் உள்ள கெனால் மன்சாலையில் வைத்து வேளச்சேரி காவல் நிலைய சட்டம் ஒழுங்குஆய்வாளர் விமல் தலைமையிலான போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்களிடமிருந்து சீசிங் ராஜா தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது. மேலும் போலீஸாரை தாக்கவும் முயன்றாராம். இதனால் தற்காப்புக்காக ஆய்வாளர் விமல் துப்பாக்கியால் சுட்டதில் இடது மார்பில் குண்டு பாய்ந்து சீசிங் ராஜா சாய்ந்துள்ளார். 

இதையடுத்து அவரை மீட்டு போலீஸார் துப்பாக்கியால் சுட்டதில் நீலாங்கரை கே.எல்.மருத்துவமனை கொண்டு வந்த போது அவர் இறந்து விட்டதாக மருத்துவர் கூறியதால் பிரேதத்தை காலை 05.45 மணிக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த என்கவுன்டர் சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள இணை ஆணையர்  சிபி சக்கரவர்த்தி,ஆந்திரவின் கடப்பா அருகே உள்ள ராஜம்பேட்டை பகுதியில் சீசிங் ராஜாவை(Seizing Raja Arrest) போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து வேளச்சேரி போலீசிடம் இரவு ஒப்படைக்கப்பட்டார். அவருக்கு எப்படி துப்பாக்கி கிடைத்தது என்பது குறித்து விசாரித்துவிட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்ய கேட்ட போது, நான் கூட்டிட்டு போய் காட்டுகிறேன் என சீசிங் ராஜா சொல்லியிருக்கிறார். முதலில் இரண்டு இடம் காட்டினார்.அந்த இடத்தில் துப்பாக்கி இல்லை. மூன்றாவது ஒரு இடத்தை காட்டும் போது ஒரு நாட்டுத்துப்பாக்கி அந்த இடத்தில் இருக்கிறது. அதை எடுத்துகொடுப்பது போல செய்கை செய்துவிட்டு இரண்டு ரவுண்டு சுட்டார். அவருடன் சென்றிருந்த இரண்டு இன்ஸ்பெக்டர்களில் ஒருவரை பார்த்து சுட்டதில் அதிர்ஷ்டவசமாக குண்டுகள் எதுவுமே இன்ஸ்பெக்டர் மீது படவில்லை. வண்டியின் மீதுதான் பட்டது.

இதனையடுத்து வேளச்சேரி இன்ஸ்பெக்டர் தற்காப்புக்காக வேறு வழியில்லாமல் இரண்டு ரவுண்டு சுட்டதில்ர காயம் அடைந்த சீசிங் ராஜா(Seizing Raja) மயங்கி விழுகிறார். இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆனால் சீசிங் ராஜா உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். இவர் மீது 6 கொலை வழக்குகள் உள்பட 39 வழக்குகள் உள்ளது. மூன்று மாதத்திற்கு முன்பாக தேடப்படும் குற்றவாளியாக மாஜிஸ்திரேட்டு அறிவித்தார். இவர் கோர்ட்டில் ஆஜரகாவில்லை. 10 வாரண்ட் பெண்டிங்க் உள்ளது. தலைமறைவாகவே இருந்து வந்தார். ஆம்ஸ்ட்ராங்க் வழக்கிற்கும் இவருக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. நாங்கள் தேடியது வேளச்சேரி கேசில்தான். அதிலே கைது செய்யும் போதுதான் இந்த மாதிரி நடந்துள்ளது என்று சிபி சக்கரவர்த்தி கூறினார்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் நெருங்கிய கூட்டாளியான சீசிங் ராஜா ஆற்காடு சுரேஷ் வழக்கு பழிக்கு பழி தீர்ப்பேன் என்று சபதம் செய்திருந்தாராம். இந்த வகையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலும் போலீஸார் சீசிங் ராஜாவை தேடிவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை காவல் ஆணையராக அருண் கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்பு பதவி ஏற்றுக்கொண்டார் அவர் பதவியேற்ற சில தினங்களிலேயே ரவுடிகள் திருவேங்கடம், காக்காதோப்பு பாலாஜி தற்போது சீசிங் ராஜா என அடுத்தடுத்து மூன்று பேர் என் கவுண்டரில் போலீஸாரால் கொல்லப்பட்டுள்ளனர். இது ஒரு புறம் இருக்க கணவர் சீசிங் ராஜாவை போலீசார் போலி என்கவுண்டரில் கொலை செய்துவிட்டதாக சீசிங் ராஜாவின் மனைவி குற்றம் சாட்டி உள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow