Sadhguru : திருப்பதி லட்டு விவகாரம்: “பக்தி இல்லாத இடத்தில்...” சத்குரு ஆவேசம்

Sadhguru About Thirupathi Ladoo Issue : கோயில் பிரசாதத்தில் மாட்டு கொழுப்பு கலந்து பக்தர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது வார்த்தைகளால சொல்லமுடியாத அளவிற்கு கேவலமான ஒன்று என தனது ஆதங்கத்தை எக்ஸ் வலைதள பக்கத்தில் சத்குரு தெரிவித்துள்ளார்.

Sep 23, 2024 - 12:41
Sep 23, 2024 - 14:20
 0
Sadhguru : திருப்பதி லட்டு விவகாரம்: “பக்தி இல்லாத இடத்தில்...” சத்குரு ஆவேசம்
Sadhguru About Thirupathi Ladoo Issue

கோயில் பிரசாதத்தில் மாட்டு கொழுப்பு கலந்து பக்தர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது வார்த்தைகளால சொல்லமுடியாத அளவிற்கு கேவலமான ஒன்று என தனது ஆதங்கத்தை எக்ஸ் வலைதள பக்கத்தில் சத்குரு தெரிவித்துள்ளார்.

Sadhguru About Thirupathi Ladoo Issue : ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. தனித்துவ சுவை கொண்ட திருப்பதி லட்டுகள் சுவாமி  ஏழுமலையானை போன்றே மிகவும் செல்வாக்கு பெற்று விளங்குகின்றன. இதற்கிடையே திருப்பதி லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலந்துள்ளது என்ற குற்றச்சாட்டு இந்தியா முழுவதும் பேசும்பொருளாகியுள்ளது

ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி கோயிலில் லட்டு தயாரிக்க விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தி வருவதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். இதை உறுதிப்படுத்தும்விதமாக திருப்பதி லட்டுவில் மாடு மற்றும் பன்றிக் கொழுப்பு இருந்தது ஆய்வில் உறுதியாகியுள்ளதாக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி அறிக்கை வெளியிட்டு இருந்தது. 

அதாவது திருப்பதி லட்டுகள் செய்ய பயன்படுத்தும் நெய்யில் மீன் எண்ணெய், மாட்டிறைச்சி கொழுப்பு, பன்றிக்கொழுப்பு என விலங்குகளின் கொழுப்புகள் கலக்கப்பட்டுள்ளதாக அந்த ஆய்வு முடிவில் தெரியவந்தது பக்தர்களின் மனதில் காயத்தை உண்டாக்கியுள்ளது. இந்த விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில், இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜக தலைவர்கள் முதல் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வரை பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

மேலும் இந்த தோஷத்திற்கு பரிகாரம் செய்வது குறித்து ஆகம விதிகளில் படி ஆலோசிக்கப்பட்டது. அதன்படி இன்று (செப்.23) காலை 6 மணி முதல் 10 மணி வரை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உள்ள தங்க கிணறு அருகே உள்ள மண்டபத்தில் சிறப்பு தோஷ நிவர்த்தி சாந்தி யாகம் நடைபெற்றது.

மேலும் படிக்க: ”குழந்தை ஆபாச படம் பார்த்தால்....” சென்னை உயர்நீதிமன்றத்துக்கு குட்டு வைத்த உச்சநீதிமன்றம்..வழக்கின் பின்னணி இதோ!

இந்நிலையில் பலரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தற்போது தனது ஆதங்கத்தையும் வெளிபடுத்தியுள்ளார் சத்குரு. இது குறித்து தன்னுடை எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டது பின்வருமாறு, ”கோயில் பிரசாதத்தில் மாட்டு கொழுப்பு கலந்து பக்தர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது வார்த்தைகளால சொல்லமுடியாத அளவிற்கு கேவலமான ஒன்று. இதனால் தான் கோயில்கள் அரசாங்கத்தால் நடத்தப்படாமல் பக்தர்களால் நிர்வகிக்கப்பட வேண்டும். பக்தி இல்லாத இடத்தில் புனிதம் இல்லாம் போய்விடுகிறது. இந்து கோயில்களை இந்து பக்தர்கள் நடத்துவதற்கான நேரம் வந்துவிட்டது” என அவர் தெரிவித்திருந்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow