குழந்தைகளின் ஆபாச படங்களை பரப்பும் நோக்கமின்றி அவற்றை சேமித்து வைத்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல எனக் கூறி ஆபாச படங்கள் பார்த்ததாக இளைஞர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழங்கிய தீர்ப்பை தவறு என கூறி ரத்து செய்துள்ளது உச்ச நீதிமன்றம்.
Supreme Court : சென்னை அம்பத்தூரை சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவர் தனது போனில் குழந்தை ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக அவரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அந்த இளைஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெஙடேஷ் தலைமையில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் அந்த இளைஞர் குழந்தை ஆபாச படங்களை பார்த்ததாக ஒப்புக்கொண்டார்.
இந்த பற்றி அறிந்துக்கொண்ட உச்சநீதிமன்றம், அப்போதே இதை கண்டித்திருந்தது. ”தனி ஒரு நீதிபதி எப்படி இப்படி சொல்ல முடியும்? இது கொடுமை” என உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்திருந்தது.
இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து குழந்தைகள் உரிமைக்கான கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பை வழங்கியது, அந்த தீர்ப்பில், “குழந்தைகள் ஆபாச பட்டங்களை பார்ப்பது குறித்து சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. குழந்தைகள் ஆபாச படங்களை செல்போனில் வைத்திருந்தால் அது போக்சோ சட்டத்தின் கீழ் குற்றம்தான்.”
மேலும் படிக்க: தலைவிரித்தாடும் நிபா வைரஸ் தொற்று.. கேரளாவில் மீண்டும் 2 பேர் பாதிப்பு!
”உயர்நீதிமன்றங்கள் மற்றும் அரசியல் சட்டப் பிரிவுகளிலும், குழந்தைகள் ஆபாச படங்கள் என்று சொல்லப்படுகிறது. அதற்கு மாறாக 'Child Sexual and Exploitative Abuse Material' என்று பயன்படுத்த வேண்டும். மத்திய அரசு இதற்கான அவசர சட்டத்தை கொண்டு வர வேண்டும்” என தீர்ப்பளித்துள்ளது உச்சநீதிமன்ற.
உச்சநீதிமன்றத்தின் இந்த சரியான தீர்ப்பை மக்கள் பாராட்டி வருகின்றனர்.