தனது தலைசிறந்த தலைவர்களில் ஒருவரை இந்தியா இழந்துவிட்டது.. மன்மோகன் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்..!
இந்தியா தனது தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான டாக்டர் மன்மோகன் சிங்கை இழந்து விட்டதாக பிரதமர் மன்மோகன் சிங் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (வயது 92) சிகிச்சை பலனின்றி காலமானார்.
முன்னாள் இந்திய பிரதமர், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர், இந்திய அரசின் பொருளாதார ஆலோசகர், காங்கிரஸ் மூத்த தலைவர் என்று பல்வேறு அடையாளங்களுடன் திகழ்ந்த டாக்டர். மன்மோகன் சிங் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இந்தியா தனது தலைசிறந்த தலைவர்களில் ஒருவரை இழந்து விட்டதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவு குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “இந்தியா தனது தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான டாக்டர் மன்மோகன் சிங்கின் இழப்பிற்காக துக்கம் அனுசரிக்கிறது. எளிமையான சூழலில் இருந்து மேலே வந்து, மதிப்பிற்குரிய பொருளாதார நிபுணராக உயர்ந்தார். நிதியமைச்சர் உட்பட பல்வேறு அரசாங்க பதவிகளிலும் பணியாற்றினார். பல ஆண்டுகளாக நமது பொருளாதாரக் கொள்கையில் வலுவான முத்திரையை பதித்தார். பாராளுமன்றத்தில் அவரது தலையீடுகளும் அற்புதமானவையாக இருந்தன. நமது பிரதமராக, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த விரிவான முயற்சிகளை மேற்கொண்டார்.
மன்மோகன் சிங் பிரதமராகவும், நான் குஜராத் முதல்வராகவும் இருந்தபோது நானும் அவரும், தொடர்ந்து உரையாடியிருக்கிறோம். அரசாங்கம் தொடர்பான பல்வேறு விஷயங்களில் நாங்கள் விரிவான விவாதங்களை நடத்துவோம். அவருடைய ஞானமும் பணிவும் எப்பொழுதும் வெளிப்படையானவை. துயரமான இந்த தருணத்தில், எனது மன்மோகன் சிங் குடும்பத்தினர், அவரது நண்பர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்” இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?