அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி ஆலயத்தில் புஷ்ப யாகம்.. பக்தர்கள் சாமி தரிசனம்..!
கரூர் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி ஆலயத்தில் உற்சவர் சுவாமிகளுக்கு புஷ்ப யாகம் நடைபெற்றது.

தென் திருப்பதி என்று அழைக்கப்படும் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி ஆலயத்தில் மாசி மாத திருத்தேர் மற்றும் தெப்ப திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனத்தில் திருவீதியுலா காட்சி தருகிறார்.
இந்த நிலையில் இன்று மாசி மாத திருவிழாவில் இறுதி நிகழ்வாக உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி உடன் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமிக்கு ஆலய மண்டபத்தில் புஷ்ப யாகம் நடைபெற்றது.
இந்த புஷ்ப யாகத்தில் சம்மங்கி,அரளி, மல்லிகை, முல்லை, துளசி உள்ளிட்ட பல்வேறு வாசனை பூக்களால் ஆலய பட்டாச்சாரியார்கள் இணைந்து புஷ்ப யாகத்தை நடத்தினர்.
தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்திய சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அனைவருக்கும் மஞ்சள், துளசி உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
What's Your Reaction?






