சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காணாமல் போன அசாம் சிறுவன் 14 நாட்களுக்குப்பிறகு மீட்பு..!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காணாமல் போன அசாம் மாநிகத்தைச் சேர்ந்த ஆறு வயது சிறுவன் 14 நாட்கள் கழித்து ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில் மீட்கப்பட்டுள்ளார்.
சிறுவனை ஆந்திர மாநிலம் கடத்திச் சென்ற ஐந்து பெண்களில் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து, காணாமல் போன ஆறு வயது சிறுவனை மீட்ட போலீசார், மூன்று பெண்களை கைது செய்த நிலையில், மீட்கப்பட்ட சிறுவனை சென்ட்ரல் ரயில்வே தனிப்படை போலீசார் சென்னை அழைத்து வருகின்றனர்.
அசாம் மாநிலத்தை சேர்ந்த பெண் சசிதா பேகம். இவரது கணவர் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்னதாக இறந்த நிலையில், இவர்களுக்கு ஆறு வயதில் சகிப் உதின் மற்றும் மூன்று வயதில் சசிதுல் இஸ்லாம் ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.
கடந்த 12ம் தேதி அசாம் மாநிலத்தில் இருந்து சஜிதா பேகம் என்ற இளம் பெண் ஆறு வயது மற்றும் 3 வயது மகன்களோடு சென்னைக்கு பிழைப்பு தேடி வந்துள்ளார். அப்போது ஆறு வயது சிறுவன் சகிப் உதீன் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காணாமல் போனார்.
அவரது தாய் போலீசாரிடம் வாய்மொழியாக கூறிவிட்டு எட்டு நாட்கள் அலைந்து திரிந்து பின் குழந்தை கிடைக்கவில்லை என கேரள மாநிலம் சென்று விட்டார். இந்த நிலையில் சென்ட்ரல் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படைகள் அமைத்து நூற்றுக்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
சிறுவனை ஐந்து பெண்கள் வட மாநிலம் செல்லும் ரயில் மூலம் ஆந்திரா வழியாக அழைத்துச் செல்வது தெரியவந்தது. இந்த நிலையில் ஆறு வயது சிறுவன் சகிப் உதீன் ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம் நசரத்பேட்டை ரயில் நிலையம் அருகே இருப்பதை அறிந்து சென்ட்ரல் ரயில்வே தனிப்படை போலீசார் மீட்டு உள்ளனர்.
உடன் குழந்தையை கடத்திச் சென்ற மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டனர். குழந்தை மற்றும் குழந்தையை கடத்திச் சென்ற மூன்று பெண்களை சென்ட்ரல் ரயில்வே போலீஸ் தற்போது சென்னை அழைத்து வருகின்றனர்.
What's Your Reaction?