Palaruvi Express Train : 'முத்து நகர்' மக்களின் கனவு நனவானது.. 'பாலருவி' எக்ஸ்பிரஸ் ரயில் தூத்துக்குடி வரை நீட்டிப்பு!

Palaruvi Express Train Extended To Tuticorin : நெல்லை - தூத்துக்குடி வழித்தடத்தில் உள்ள வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்துக்கு சென்றால் எஞ்சின் மாற்ற வேண்டும். இதனால் கூடுதல் நேரம் விரயமாகும் என்பதால் 'பாலருவி' எக்ஸ்பிரஸ் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் செல்லாமல் பைபாஸ் வழியாக இயக்கப்படுகிறது.

Aug 16, 2024 - 17:22
Aug 17, 2024 - 09:51
 0
Palaruvi Express Train : 'முத்து நகர்' மக்களின் கனவு நனவானது.. 'பாலருவி' எக்ஸ்பிரஸ் ரயில் தூத்துக்குடி வரை நீட்டிப்பு!
Palaruvi Express

Palaruvi Express Train Extended To Tuticorin : தென் தமிழ்நாட்டில் இந்தியாவின் முக்கியமான துறைமுக நகராக விளங்கி வருகிறது தூத்துக்குடி. 'முத்து நகர்' என்று அழைக்கப்படும்  தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மக்கள் ஏராளமானோர் நமது அண்டை மாநிலமான கேரளத்தில் வசித்து வருகின்றனர். மேலும் தொழில் நிமித்தமாகவும் கேரளாவில் இருந்து தூத்துக்குடிக்கு ஏராளமானோர் பயணித்து வருகின்றனர்.

ஆனால் தூத்துக்குடியில் இருந்து கேரளத்துக்கு நேரடி ரயில் சேவை இல்லை. இதனால் நெல்லையில் இருந்து கேரளாவின் பாலக்காட்டுக்கும்,  பாலக்காட்டில் இருந்து நெல்லைக்கும் தினமும் இயக்கப்பட்டு வரும் 'பாலருவி' எக்ஸ்பிரஸ் ரயிலை(Palaravi Express Train) தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும் என்று மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், மக்களின் கோரிக்கையை ஏற்று நேற்று முதல் 'பாலருவி' எக்ஸ்பிரஸ் ரயில்(Palaravi Express Train in Thoothkudi) தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் இருந்து தினமும் இரவு 10 மணிக்கு புறப்படும் ரயில் நெல்லைக்கு 11.25 க்கு வந்து சேரும். பின்பு நெல்லையில் இருந்து வழக்கமான நேரமான 11.30 மணிக்கு புறப்பட்டு தென்காசி, புனலூர், கொல்லம், காயம்குளம், கோட்டயம், எர்ணாகுளம் டவுன், திரிச்சூர் வழியாக பாலக்காடு ரயில் நிலையத்துக்கு மறுநாள் மதியம் 12 மணிக்கு சென்றடையும்.

மறுமார்க்கமாக, பாலக்காட்டில் இருந்து தினமும் மாலை 4.05 மணிக்கு புறப்படும் ரயில் மேற்கண்ட பகுதிகள் வழியாக சென்று மறுநாள் காலை 6.40 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும். நெல்லை-. தூத்துக்குடி வழித்தடத்தில் உள்ள வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்துக்கு சென்றால் எஞ்சின் மாற்ற வேண்டும். இதனால் கூடுதல் நேரம் விரயமாகும் என்பதால் 'பாலருவி' எக்ஸ்பிரஸ் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் செல்லாமல் பைபாஸ் வழியாக இயக்கப்படுகிறது. 

வாஞ்சி மணியாச்சி செல்லாமல், பைபாஸ் வழியாக இயக்கப்படும் முதல் பயணிகள் ரயில் பாலருவி எக்ஸ்பிரஸ் ஆகும், ஏற்கெனவே இந்த ரயிலுக்கு கொல்லம் ரயில் நிலையத்தில் இரு மார்க்கத்திலும்  எஞ்சின் மாற்றம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும்  'பாலருவி' எக்ஸ்பிரஸில்(Palaravi Express Train) 1 முன்பதிவு பெட்டி மற்றும் 3 முன்பதிவில்லா பெட்டிகள் என 4 பெட்டிகள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.

'பாலருவி' ரயில் தூத்துக்குடி(Tuticorin Train) வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதால் 'முத்து நகர்' மக்களின் நீண்டகால கனவு நனவாகியுள்ளது. 'பாலருவி' எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த சில நாட்களாக 'வந்தே பாரத்' ரயில் செல்வதற்காக எர்ணாகுளம் டவுன்-கோட்டயம் ரயில் நிலையங்களுக்கு இடையே 1 மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. இதை கண்டித்து இந்த ரயிலில் பயணிக்கும் கேரள பயணிகள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு தினமும் கூடுதல் ரயில் இயக்க வேண்டும். தூத்துக்குடியில் இருந்து கோவைக்கு தினமும் நேரடி ரயில் சேவை வேண்டும் என்று தூத்துக்குடி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow